Skip to main content

அம்பானி தயாரிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் தமிழில் உருவாகும் பிரமாண்ட படம்...

Published on 03/05/2019 | Edited on 03/05/2019

தமிழ் எழுத்தாளர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை படமாக எடுப்பது மணிரத்னத்தின் கனவு. தற்போது அவருடைய கனவுப்படத்தை சாத்தியமாக்க ரிலையன்ஸ் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளார் மணிரத்னம்.
 

maniratnam


பல வருடங்களாக இந்த படத்தை எடுக்க முயற்சி செய்து வருகிறார். ஆனால், பட்ஜெட் உள்ளிட்ட சில விஷயங்களால் தள்ளிப் போய்விடுகிறது.
 

தற்போது விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களை வைத்தும் பாலிவுட் நட்சத்திரங்களான அமிதாப், ஐஸ்வர்யா ராய் என பாலிவுட் நட்சத்திரங்களை வைத்தும்  ‘பொன்னியின் செல்வன்’படத்தை இயக்கப் போகிறார் மணிரத்னம்.
 

மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படத்தை, லைகா புரொடக்‌ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து தயாரிப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால், பட்ஜெட் பெரிதாக இருப்பதால் லைகா நிறுவனம் பின்வாங்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளார் மணிரத்னம்.
 

devarattam


தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தில், அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவி, ஆதித்ய கரிகாலனாக விக்ரம், சுந்தர சோழராக அமிதாப் பச்சன், வல்லவராயன் வந்தியத்தேவனாக கார்த்தி ஆகியோர் நடிக்கின்றனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. 
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உள்ளாடையை 18 ரூபாய் கூடுதலாக விற்பனை செய்த பிரபல கடைக்கு ரூபாய் 2.05 லட்சம் அபராதம் விதிப்பு

Published on 12/10/2022 | Edited on 12/10/2022

 

A fine of Rs 2.05 lakh has been imposed on a popular shop for selling underwear at Rs 18 extra!

 

உள்ளாடையை 18 ரூபாய் கூடுதலாக விற்பனை செய்த ரிலையன்ஸ் ட்ரெண்ட்ஸ் நிறுவனத்திற்கு 10 ஆண்டுகள் கழித்து ரூபாய் 2.05 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

 

சென்னை மயிலாப்பூரில் உள்ள ரிலையன்ஸ் ட்ரெண்ட்ஸ் துணிக்கடையில் கடந்த 2013- ஆம் ஆண்டு ஓசூரைச் சேர்ந்த சிவப்பிரகாசம் என்பவர் 278 ரூபாய்க்கு உள்ளாடைகளை வாங்கியுள்ளார். ஆனால், அதன் விலைகளை சோதித்த போது, MRP விலையை விட 18 ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்பட்டது தெரிய வந்தது, இதையடுத்து, அந்த நிறுவனத்திற்கு கடிதம் அனுப்பிய நிலையில், ஊழியர்களின் தவறால் விலை மாற்றம் நடந்திருப்பதாகக் கூறி 18 ரூபாயை அனுப்பியுள்ளனர். 

 

இதனையேற்க மறுத்த சிவப்பிரகாசம், திருவாரூர் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில், நீதிமன்றம் தற்போது தீர்ப்பினை வழங்கியுள்ளது. அதன்படி, தமிழ்நாடு நுகர்வோர் நல நீதி வங்கிக் கணக்கில் 2 லட்சம் ரூபாய் இழப்பீட்டைச் செலுத்த வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட சிவபிரகாசத்திற்கு ரூபாய் 5,000 இழப்பீட்டை வழங்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

 

Next Story

முகேஷ் அம்பானி குடும்பத்திற்கு கொலை மிரட்டல்; காவல்துறை விசாரணை

Published on 06/10/2022 | Edited on 06/10/2022

 

Mukesh Ambani family; Police build-up

 

மும்பையில் முகேஷ் அம்பானி குடும்பத்தினருக்கும் ரிலையன்ஸ் மருத்துவமனைக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டனர்.

 

கடந்த புதன் அன்று ரிலையன்ஸ் மருத்துவமனைக்கு தெரியாத எண்ணில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது.  அழைப்பில் பேசிய நபர் முகேஷ் அம்பானியின் குடும்பத்திற்கு கொலை மிரட்டல் விடுத்து மருத்துவமனையையும் வெடி வைத்து தகர்க்கப்போவதாக கூறினார்.

 

மர்ம நபரின் தொலைபேசியின் அழைப்பை தொடர்ந்து வெடிகுண்டு நிபுனர்கள் மோப்ப நாய் உதவியுடன் மருத்துவமனையில் சோதனையில் ஈடுபட்டனர். இந்த வழக்கு டிபி மார்க் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது. 

 

இதே போல் முகேஷ் அம்பானி, நேத்தா அம்பானி குடும்பத்தினரை கொல்லப்போவதாகவும் மிரட்டல் அழைப்பு வந்ததை அடுத்து அவர்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. விரைவில் மிரட்டல் விடுத்த நபர்களை கைது செய்து விடுவோம் என காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.