/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/yaathum.jpg)
அறிமுக இயக்குநர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்'. இப்படத்தில், விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். மகிழ் திருமேனி வில்லனாக நடிக்கும் இப்படத்தில் விவேக், மோகன் ராஜா, ரித்விகா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார்.படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதோடு,படத்தின்மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் படத்தின் ரிலீஸ் குறித்தஅறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' திரைப்படம் டிசம்பர் மாதம் வெளியாகும் எனக்கூறப்பட்டுள்ளது. இதனைதனது ட்விட்டர் பதிவின்மூலம் நடிகர் விஜய் சேதுபதி உறுதி செய்துள்ளார். சமீபத்தில் வெளியான விஜய் சேதுபதி படங்கள் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Happy Diwali ? #YaadhumOoreYaavarumKelir December Release.@ChandaraaArts@cineinnovations@EssakiduraiS@roghanth@akash_megha@raguaditya_@Riythvika@jayam_mohanraja@Vetri_DOP@nivaskprasanna@AbrahamEditor@saregamasouth@onlynikil@CtcMediaboypic.twitter.com/8I9tSDvC8k
— VijaySethupathi (@VijaySethuOffl) November 4, 2021
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)