Skip to main content

'வெந்து தணிந்தது காடு' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

 

Release date of 'Vendhu Thanindhathu Kaadu' has been announced

 

சிம்பு, 'மாநாடு' படத்தைத் தொடர்ந்து கௌதம் மேனன் இயக்கும், 'வெந்து தணிந்தது காடு' படத்தில் நடித்து முடித்துள்ளார். 'வேல்ஸ் இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸ்' சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கும் இப்படத்தில் கதாநாயகிகளாக கயாடு லோகர் மற்றும் சித்தி இட்னானி நடிக்கின்றனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். ஏற்கனவே வெளியான இப்படத்தின் டீசர் மற்றும் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படத்தின் அனைத்து படப்பிடிப்பு பணிகளும் நிறைவு பெற்று தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. 

 

இந்நிலையில் 'வெந்து தணிந்தது காடு' படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. அதன்படி இப்படம் வருகிற செப்டம்பர் 15-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனைப் படத்தின் தயாரிப்பு நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்து ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளது.