Skip to main content

இரண்டு பிரம்மாண்ட படங்களின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

 

sooryavanshi

 

பத்மாவத், சிம்பா, கல்லி பாய் என தொடர் வெற்றிகளைப் பெற்ற நடிகர் ரன்வீர் சிங். தற்போது ‘83’ என்னும் படத்தில் நடித்துள்ளார். இது 1983ஆம் ஆண்டில் கபில் தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி உலகக்கோப்பை வென்றதைப் பற்றி உருவாகும் படம் ஆகும்.
 

அப்போது இந்திய அணியின் கேப்டனாக திறம்பட செயல்பட்ட கபில்தேவின் கதாபாத்திரத்தை ரன்வீர் சிங் ஏற்று இதில் நடிக்கிறார். மற்ற வீரர்களின் கதாபாத்திரத்தை ஏற்று பல நடிகர்கள் இதில் நடிக்கின்றனர். கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் கதாபாத்திரத்தை தமிழக நடிகர் ஜீவா நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

கபில் தேவின் மனைவி ரோமி பாடியா கதாபாத்திரத்தை ரன்வீர் சிங்கின் மனைவியான தீபிகா படுகோன் தான் நடிக்கிறார். பஜ்ரங்கி பைஜான் என்கிற மாபெரும் வெற்றி படத்தை இயக்கிய கபீர் கான் தான் இந்தப் படத்தையும் இயக்குகிறார். இந்தப் படத்திற்கான ஷூட்டிங் இங்கிலாந்தில் நடைபெற்றது.


இப்படம் முதலில் ஏப்ரல் 10ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாவதாக இருந்தது. ஆனால், கரோனா அச்சுறுத்தல் காரணமாக படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இப்படம் இந்த வருட கிறிஸ்துமஸ் விழாவின்போது வெளியிடப்படும் என்று திரையரங்கு நிறுவனங்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் ரோஹித் செட்டி இயக்கத்தில் அக்ஷய் குமார் நடிப்பில் உருவான சூர்யவன்ஷி படம் இந்த வருட தீபாவளிக்கு வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருட மார்ச் 24ஆம் தேதி வெளியிடுவதாக அறிவிக்கப்பட்ட படம் கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

மிஸ் பண்ணிடாதீங்க