Advertisment

'சூர்யா - அருண் விஜய்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Release date of 'Surya - Arun Vijay' movie is announced

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சூர்யா. இவர் தனது மனைவி ஜோதிகாவுடன் இணைந்து '2டி என்டர்டெயின்மெண்ட்' என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்திவருகிறார். இந்நிறுவனம் தயாரிப்பில் கடந்த ஆண்டு 'இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்', 'உடன்பிறப்பே', 'ஜெய் பீம்' போன்ற படங்கள் வெளிவந்துள்ளன.

Advertisment

இந்நிலையில் '2டி என்டர்டெயின்மெண்ட்' நிறுவனத்தின் அடுத்த படைப்பாக உருவாகியிருக்கும்படம் 'ஓ மை டாக்'. இப்படத்தில் அருண் விஜய்யின் மகன் அர்னவ் விஜய் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிறார். விஜய்குமார், அருண் விஜய், வினய், மகிமா நம்பியார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

Advertisment

இப்படத்தை சரோவ் சண்முகம் இயக்குகிறார். நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார். இப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. சில காரணங்களால் வெளியாகவில்லை. தற்போது 'ஓ மை டாக்' படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி 'ஏப்ரல் 21'- தேதி தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

actor surya arun vijay
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe