Advertisment

எஸ்.ஜே சூர்யா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு ; புதிய போஸ்டர்களை வெளியிட்ட படக்குழு

Release date announcement of SJ Surya film; The film crew released the new posters

தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான எஸ்.ஜே சூர்யா தற்போது நடிப்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். விஷால் நடிப்பில் உருவாகி வரும் 'மார்க் ஆண்டனி' படத்தில் வில்லனாகவும், ராதாமோகன் இயக்கும் 'பொம்மை' படத்தில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். இதனிடையே வெங்கட் ராகவன் இயக்கத்தில் 'கடமையை செய்' படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தில் எஸ்.ஜே சூர்யாவிற்கு ஜோடியாக யாஷிகா ஆனந்த் நடித்துள்ளார். மொட்டை ராஜேந்திரன், சார்லஸ் வினோத், வின்சென்ட் அசோகன், ராஜசிம்மன், ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

Advertisment

இந்நிலையில் 'கடமையை செய்' படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அதன் படி இப்படம் வருகிற ஜூன் 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு, அதிகாரப்பூர்வமாக சமூக வலைத்தளங்களில் தெரிவித்து ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டர்களையும் வெளியிட்டுள்ளது.

Advertisment

yashika anand
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe