Advertisment

ரேகாவின் மிரியம்மா - ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

rekha in miriam maa first look released

'கடலோர கவிதைகள்' புகழ் நடிகை ரேகா சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கதையின் நாயகியாக முதன்மையான வேடத்தில் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு 'மிரியம்மா' என பெயரிடப்பட்டிருக்கிறது. அறிமுக இயக்குநர் மாலதி நாராயண் இயக்க, ரேகாவுடன் எழில் துரை, சினேகா குமார், அனிதா சம்பத், விஜே ஆஷிக், மாலதி நாராயண் ஆகியோர் நடிக்கிறார்கள். ஏ.ஆர்.ரெஹானா இசையமைக்கிறார்.

Advertisment

தாய்மை அனுபவத்தை ஏற்கத்தயாராகும்மூத்த பெண்மணி ஒருவரின் வாழ்வியலை மையப்படுத்தி தயாராகும் இந்த திரைப்படத்தை ஸ்ரீ சாய் புரொடக்சன் எனும் பட நிறுவனம் தயாரித்திருக்கிறது. திருமணத்திற்குப் பிறகு குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த நடிகை ரேகா, 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கதையின் நாயகியாகநடிக்கிறார்.

Advertisment

இந்நிலையில் 'மிரியம்மா' படத்தின்ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது. படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ''பெண்ணாகப் பிறந்தஒவ்வொருவரும் பூப்பெய்திய பிறகு தாய்மை அடைய வேண்டும் என விரும்புவர்.ஆனால், 50 வயதிற்கு மேற்பட்ட பெண்மணி ஒருவர் தாய்மை அடைய விரும்புகிறார். செயற்கை முறை கருவூட்டல் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் அவர் சந்திக்கும் சவால்கள் தான் இப்படத்தின் கதை'' என்றார்.

rekha
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe