regina speech at Michael movie Press Meet

லோகேஷ் கனகராஜ் வழங்க 'ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ்' தயாரித்துள்ளபுதிய படம் 'மைக்கேல்'. இப்படத்தில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடிக்க விஜய் சேதுபதி சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கியுள்ள இப்படம் பிப்ரவரி 3ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடத்தியது படக்குழு. இதில் நடிகை ரெஜினா, சந்தீப் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும்கலந்து கொண்டு பேசினர்.

Advertisment

நடிகை ரெஜினா பேசுகையில், "எனக்கும் சந்தீப்புக்குமான நட்பு மிகவும் ஆழமானது. படத்தில் மட்டும் அல்ல அவருடைய தனிப்பட்ட கதாபாத்திரமும் அப்படிதான். ஒன்னு வேணும்னு நினைச்சான்னா... அத பண்ணிட்டேஇருப்பான். சினிமாவில் இந்தளவுக்கு சந்தீப் வளர்ந்திருக்கான்னுநினைக்கும் போது ஒரு நண்பனாக பெருமைப் படுகிறேன். அவரது நிக் நேம் தாத்தா. ஏனென்றால் எப்போதுமேஅட்வைஸ் கொடுத்துட்டே இருப்பான்.அதனால் தாத்தான்னு பேரு வெச்சுட்டேன். இப்பவும்அப்படி தான்சந்தீப்பை கூப்பிடுவேன். இந்த படத்தைப் பார்க்க நான் ஆவலாய் இருக்கிறேன்" என்றார்.

Advertisment

இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி பேசுகையில், "எனக்கு எந்த சிக்கலும் இல்லாமல், படத்தை இப்பொழுதும் இருக்கும் தரத்திற்கு எடுத்து வர, தோள் கொடுத்தவர் தயாரிப்பாளர்கள் தான்.விஜய் சேதுபதி என் மீது அதிகமான அன்பு வைத்துள்ள, என்னுடைய நல்ல நண்பர். இந்த படத்தில் ஒரு கேமியோ கதபாத்திரத்தில் நடிக்க எல்லா மொழிகளுக்கும் தெரிந்த ஒரு நடிகர் தேவைப்பட்டார். நான் விஜய் சேதுபதி சாரிடம் கேட்ட போது, அவர் உடனே ஒத்துக்கொண்டார். கௌதம் சார் படங்களைப் பார்த்துத் தான் நான் வளர்ந்தேன். அவரிடம் ஒரு கம்பீரம் இருக்கிறது. அவர் கதையைக் கேட்டு எங்களை முழுமையாக நம்பினார்" என்றார்.