
ரெஜினா கஸண்ட்ரா நடிப்பில் உருவாகும் ‘சூர்ப்பனகை’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. ஆப்பிள் ட்ரீ ஸ்டுடியோஸ் சார்பில் ராஜசேகர் வர்மா தயாரிக்கும் இப்படம், ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகிறது. படத்தின் பெரும்பான்மையான காட்சிகள், குற்றாலம் பகுதியில்படமாக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு படத்திலும் தனது மாறுபட்ட நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்துவரும் நடிகை ரெஜினா கஸண்ட்ரா இப்படத்தில் தொல்பொருள் ஆய்வாளராக நடித்துள்ளார்.
சாம் சி.எஸ்.இசையமைக்கும் இப்படத்தில் அக்சரா கவுடா, மன்சூர் அலிகான், ஜெய பிரகாஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படம் குறித்து இயக்குநர் கார்த்திக் ராஜு பேசியபோது... "‘சூர்ப்பனகை’ படத்தின் முழு படப்பிடிப்பும் மிக இனிமையாக நடந்தேறியது. நாங்கள் தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகளைத் தீவிரமாக செய்துவருகிறோம். விரைவில் படத்தின் டிரெய்லரை வெளியிட திட்டமிட்டுள்ளோம். ‘சூர்ப்பனகை’ படம் அதன் பரபர காட்சிகள், திகில், மர்மம், நகைச்சுவை கூறுகள் ஆகியவற்றால் பார்வையாளர்களுக்குப் புதுவிதமான திரையரங்கு அனுபவத்தை வழங்கும்" என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)