/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/244_14.jpg)
தமிழில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' படத்தில் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ரெஜினா காஸண்ட்ரா. தொடர்ந்து மாநகரம், நெஞ்சம் மறப்பதில்லை, சரவணன் இருக்க பயமேன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தமிழைத்தொடர்ந்து தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் சினிமாவில் அவர் சந்தித்த மோசமான அனுபவம் குறித்து மனம் திறந்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "ஆரம்ப காலகட்டத்தில் நடிக்க வாய்ப்பு தேடி சிலரை அணுகினேன். அப்போது ஒரு நபர் தன்னை அழைத்து, அட்ஜஸ்ட்மென்ட் செய்யத் தயாராக இருந்தால், உடனே படப்பிடிப்பைத் தொடங்கலாம் என சொன்னார். அப்போது எனக்கு 20வயது தான். அட்ஜஸ்ட்மென்ட் என்ற வார்த்தைக்கு அர்த்தம் புரியவில்லை. என் சம்பள தொடர்பான விஷயத்தை சொல்கிறார் என நினைத்தேன். பிறகு உண்மை என்ன என்று என் மேலாளர் மூலம் தான் தெரிய வந்தது.
சில நடிகைகள் இந்த மாதிரி நிகழ்வுகளை சந்திக்க நேரிடும். ஆனால், இன்னும் சில நடிகைகள் தங்களை பிரபலம் ஆக்கி கொள்வதற்காகஇப்பிரச்சனையை பயன்படுத்திக் கொள்கிறார்கள்" என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)