Advertisment

அஜித்திடம் பிடித்த விஷயம் - மனம் திறந்த ரெஜினா

Regina Cassandra about ajith in vidaamuyarchi

மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா தயாரிப்பில் அஜித் குமார், த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள படம் விடாமுயற்சி. இவர்களுடன் ரெஜினா, அர்ஜுன், ஆரவ், நிகில் நாயர், தசரதி, கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள நிலையில் அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் டீசர், டிரைலர் மற்றும் இரண்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

Advertisment

இப்படம் பொங்கல் வெளியீடாக அறிவிக்கப்பட்டு பின்பு விலகியது. இப்போது பிப்ரவரி 6ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது. இதனால் படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் படத்தின் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக சொல்லப்படும் ரெஜினா கசாண்ட்ராவை நக்கீரன் ஸ்டூடியோ சார்பாக சந்தித்தோம். அவரிடம் படம் குறித்தும் அவரது தனிப்பட்ட விஷயங்கள் குறித்தும் கேள்விகள் கேட்கப்பட்டது. அவரும் அனைத்திற்கும் பதிலளித்தார்.

Advertisment

இதனிடையே அஜித் தொடர்பாக அவர் பொதுவெளியில் பேசுவதில்லை இருந்தாலும் அவரிடம் பிடித்த விஷயம் என்ன என்ற கேள்விக்கு ரெஜினா கசாண்ட்ரா பதிலளிக்கையில், “அஜித் பேசுவதை விட செய்து காட்டிவிடுவார். அந்த செயல் பயங்கரமாக பேசப்படும். அதனால் அவர் பேச வேண்டும் என்ற அவசியம் இல்லை. விடாமுயற்சி முடித்து விட்டுத்தான் கார் ரேஸ் டீமை உருவாக்கினார். பிறகு அதிலே முழு மூச்சாக இறங்கிவிட்டார். நிறைய அட்வைஸ் கொடுப்பார். அவரது அனுபவங்களை பகிர்ந்து கொள்வார். அவர் ஒரு வாக்கு கொடுத்துவிட்டால் அதை கண்டிப்பாக நிறைவேற்றி விடுவார். சின்ன விஷயமாக இருந்தாலும் சரி பெரிய விஷயமாக இருந்தாலும் சரி யாருக்கு கொடுத்தாலும் சரி எதைப் பற்றி கொடுத்தாலும் சரி அதை நிச்சயம் முடித்துவிடுவார். அதற்காக நிறைய உழைப்பை போடுவார். அவரால் செய்ய முடியுமா என யோசிக்கும் விஷயத்தை கூட வாக்கு கொடுத்துவிட்டதால் செய்து காட்டுவார். இந்த விஷயம் அவரை நம்பியவர்களுக்கு நல்ல சூழ்நிலையை உருவாக்கும்” என்றார்.

vidamuyarchi ACTOR AJITHKUMAR Regina Cassendra
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe