Skip to main content

'சமூகம் அவர்களை எப்படி நடத்துகிறது என்பதை இப்படம் பேசும்' - ரீல் பட இயக்குனர் விளக்கம் 

Published on 06/02/2019 | Edited on 06/02/2019
reel

 

'ரீல்' படக்குழுவினர் பத்திரிக்கை மற்றும் ஊடகங்களை சந்தித்து அவர்களுடன் உரையாடினர். அப்போது நிகழ்வில் இயக்குனர் முனுசாமி கூறும்போது.... "இந்த திரைப்படத்தில் மிகப்பெரிய தொழில்நுட்ப கலைஞர்கள் பணியாற்றியுள்ளனர். இது வழக்கமான கதையாக இருந்தாலும், கதை சொல்லலில் வித்தியாசமான மற்றும் தனித்துவமான முயற்சியை மேற்கொண்டிருக்கிறோம். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சி. இந்தப் படம் வேலையில்லாத ஒரு பையனுக்கும், கிராமத்து பெண்ணுக்கும் இடையே நிகழும் காதலையும், சமூகம் அவர்களை எப்படி நடத்துகிறது என்பதையும் பேசும் படம். இந்த படத்தில் உதயராஜ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், பல யோசனைகளுக்குப் பிறகு அவர் நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவந்திகா இந்த படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிறார்" என்றார்.

 

 

நடிகர் உதயராஜ் இப்படம் குறித்து கூறும்போது... "இந்த படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பளித்த மொத்த குழுவுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இந்த படம் இரண்டு வித்தியாசமான வாழ்க்கை முறைகளை சுற்றியது. துல்லியமாக சொல்வதென்றால், வசதியான குடும்ப பின்னணியில் இருந்து வந்த ஒரு பையனை பற்றியும், கிராமத்தில் இருந்து தன் வாழ்வாதாரத்திற்காக நகரத்துக்கு வந்த பெண்ணை பற்றியும் பேசும் படம். அவளது அப்பாவியான தன்மையால் அவளை அனைவரும் ஏமாற்றுகிறார்கள். இந்த இருவரும் எவ்வாறு சந்தித்துக் கொள்கிறார்கள், அதற்கு பிறகு என்ன ஆகிறது என்பது மீதிக்கதை. இத்திரைப்படம் அடுத்தடுத்த நிகழ்ச்சிகளால் சஸ்பென்ஸ் காட்சிகளால் நகர்கிறது. சினிமா துறையில் என் பயணம் துவங்கியது, மலையாளத்தில் நான் நடித்த சில குறும்படங்களின் மூலம் தான். அங்கு இன்னும் பல வாய்ப்புகள் கிடைத்தன. இருப்பினும், என் முக்கிய நோக்கம் தமிழ் படத்தில் நடிப்பதே. இப்போது 'ரீல்' படத்தின் மூலம் அது நிறைவேறி இருக்கிறது" என்றார். திரைப்படத்தின் போஸ்ட் புரொடக்சன்  பணிகள் ஏற்கனவே முடிந்து, படத்தை பிப்ரவரி மாத இறுதியில் வெளியீட படக்குழு திட்டமிட்டுள்ளனர். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

ரீல்ஸ் வீடியோ எடுப்பதில் தகராறு; கலவரக் காடான பார்க் 

Published on 27/11/2023 | Edited on 27/11/2023

 

Reels videotaping dispute; Womens fight in park

 

அண்மைக் காலமாகவே 'மாஸ், ரொமான்ஸ்,காமெடி என்ற பெயரில் இளைஞர்கள், பெண்கள் சிறுவர்கள், மாணவர்கள் என வயது பாரபட்சமின்றி ரீல்ஸ் வீடியோ வெளியிடுவது ட்ரெண்டாகி வருகிறது. சில நேரங்களில் ஆபத்தான முறைகளில் வாகனங்களில் செல்லும் போதும், நீர் நிலைகளின் அருகிலும் விபரீதம் அறியாமல் ரீல்ஸ் எடுக்க முயன்று உயிரிழப்பு வரை ஏற்படுகின்ற சம்பவங்களும் அதிகம். இந்நிலையில் பார்க்கில் ரீல்ஸ் வீடியோ எடுக்க முயன்று குடுமிப்பிடி சண்டை போட்டுக்கொண்ட பெண்களால் கலவரமே வெடித்த சம்பவம் ஆந்திராவில் நிகழ்ந்துள்ளது. 

 

ஆந்திர மாநிலம் குண்டூரில் புதிதாக நேற்று பூங்கா ஒன்று திறக்கப்பட்டது. இதனால் அந்த பூங்காவில் அதிகப்படியான கூட்டம் கூடியது. அப்பொழுது அந்த பகுதியில் ரீல்ஸ் வீடியோ எடுத்துக் கொண்டிருந்த இரண்டு தரப்பு பெண்களுக்கிடையே தகராறு ஏற்பட்டு வாக்குவாதமானது. இதில் ஒருவரை ஒருவர் குடுமியை பிடித்துக் கொண்டு கடுமையாக தாக்கிக் கொண்டனர். இதனால் ஏற்பட்ட பரபரப்பால் சற்று பதற்றம் நிலவியது. இந்த தாக்குதல் தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

 

Next Story

ரீல்ஸ் மோகத்தில் கத்தியைக் காட்டி பணம் பறிப்பு; தப்ப முயன்ற இளைஞருக்கு மாவுக்கட்டு

Published on 05/07/2023 | Edited on 05/07/2023

 

Three youths wanted by the police; The teenager tried to escape and fell down

 

சென்னையில் கத்தியைக் காட்டி மிரட்டி அதனை வீடியோவாகப் பதிவு செய்து இன்ஸ்டாகிராமில் ரிலீஸ் வீடியோவாக வெளியிட்ட இளைஞர்களை போலீசார் கைது செய்ததோடு வழக்கம்போல் மாவு கட்டும் போட்டுள்ளனர்.

 

சென்னை மேடவாக்கம் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் என்ற இளைஞர் பள்ளிக்கரணை பகுதியில் உள்ள டிவிஎஸ் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அவருடைய நண்பர் வெங்கடேஷுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது திடீரென வழிமறித்த மூன்று இளைஞர்கள் கத்தியைக் காட்டி பணம் கேட்டு மிரட்டியதோடு அவர் கையிலிருந்த மோதிரத்தைப் பறித்துள்ளனர்.

 

இதுதொடர்பாக சதீஷ்குமார் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், போலீசார் அவர்களைத் தேடினர். அப்பொழுது அந்த இளைஞர்கள் அதே பகுதியில் மது  குடித்துக் கொண்டிருந்தது தெரிய வந்தது. உடனே சுற்றி வளைத்த போலீசார் அந்த மூன்று இளைஞர்களையும் கைது செய்தனர். அவர்களின் செல்ஃபோனை வாங்கி பார்த்த பொழுது கத்தியை வைத்துக்கொண்டு மிரட்டுவது மேலும் ஆக்ரோஷமாக கத்தியை கையில் வைத்துக்கொண்டு நடப்பது போன்று வீடியோ பதிவு செய்து அதனை இன்ஸ்டாகிராமில் ரிலீஸ் வீடியோ பதிவிட்டு வந்தது தெரிய வந்தது. வீடியோ வெளியிடுவதைத் தாண்டி கத்தியைக் காட்டி பணம் பறித்து வந்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. விக்னேஷ், கிங்ஸ்லி பால், விஷ்ணு ஆகிய மூன்று பேரை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். விசாரணையின் போது தப்பி ஓட முயன்ற விக்னேஷ் கீழே விழுந்து கை உடைந்ததால் போலீசார் மாவுக்கட்டு போட்டுள்ளனர்.