Advertisment

ரீல் விடும் காதல் ஜோடி !

reel

கதையில் இருக்கும் கதாபாத்திரங்களும், அதன் தன்மையுமே ஒரு ரொமான்டிக் படத்தின் தரத்தை தீர்மானிக்கிறது. மேலும் கதாபாத்திரங்களின் வலிமையை உணர்த்தும் திரைப்படங்களை தமிழ் சினிமா நிறைய கண்டுள்ளது . இத்தகைய காதல் திரைப்படங்களை நிலையாக கொடுத்துவரும் தமிழ் சினிமாவின் வரிசையில், நம்பிக்கையோடு சேர தயாராகயிருக்கிறது "ரீல்" படம்."காதல் திரைப்படங்கள் ரசிகர்களுக்கு புதியவை இல்லையென்றாலும், அதன் வடிவமைப்பே அவற்றை தனித்து காட்டுகிறது . தலைப்பு என்பது ஒரு படத்தின் முக்கிய அம்சம், இப்படத்தின் தலைப்பான "ரீல்" என்பது எதற்காக என்று கேள்விக்கு படத்தின் கதையே பதில் கூறும்.

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6542160493"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

நடிகர்கள் உதய்ராஜ் மற்றும் அவந்திகா கதாபாத்திரத்தின் வலிமையை உணர்ந்து நடித்து இருக்கிறார்கள். KPY புகழ் சரத் இப்படத்தில் முழு நேர நகைச்சுவை நடிகராக மட்டுமில்லாமல், ஒரு குணச்சித்ர நடிகராகவும் இப்படம் வெளிப்படுத்தும். படத்தின் இறுதியில் வரும் திருப்பங்களும், கூறப்பட்டிருக்கும் கருத்தும் மக்களை வெகுவாக கவரும். கோவை,மெலுகொட் கோத்தகிரி மற்றும் மைசூர் போன்ற பகுதிகளில் படப்பிடிப்பு மிகவும் வேகமாக நடைபெறுகிறது" என்றார் படத்தின் இயக்குனர் முனுசாமி. "ரீல்" படத்தின் கதையை டி.என்.சூரஜ் எழுத, முனுசாமி இயக்குகிறார். ரொமான்டிக் திரைப்படங்களில் இசையின் பங்களிப்பு சற்று அதிகமாக இருக்கும், இப்படத்திற்கு சந்தோஷ் சந்திரன் பாடல்களையும், அச்சு ராஜாமணி பின்னணி இசையும் கவனிக்கின்றனர். சுனல் பிரேம் ஒளிப்பதிவு செய்ய, சாய் சுரேஷ் படத்தொகுப்பு செய்கிறார். ஸ்ரீ முருகா மூவி மேக்கர் தயாரிக்கும் இப்படத்தை விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

reel
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe