Advertisment

"காதில் ஜீரா ஊற்றுவது போல இருந்தது" - ரெடின் கிங்ஸ்லி

Reding Kingsley Jailer Thanks Giving Meet

ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் திரைப்படம் வெளியாகி ஒரே வாரத்தில், 375 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்துள்ள நிலையில், படத்தின் சக்ஸஸ் மீட் நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் நெல்சன் திலீப் குமார், வசந்த் ரவி, சுனில், மிர்னா மேனன், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட படக்குழுவினர் பலர் கலந்து கொண்டு பேசினர்.

Advertisment

நகைச்சுவை நடிகர் ரெடின் கிங்ஸ்லி, "நெல்சனுக்கு நன்றி. ஜெயிலர் படம் வெளியான நாள், ஒரு பத்து தீபாவளி மொத்தமாக வந்தது போல இருந்தது. ஒரு வாரமாக காதில் ஜீரா ஊற்றுவது போல, அந்த பக்கம் நூறு கோடி.... இந்தப் பக்கம் நூறு கோடி... என்ற தகவல்கள் வந்தவண்ணம் இருந்தது. எனக்கு தெரிந்து சுமார் 1000 கோடியை தாண்டிடும்னு நினைக்கிறேன்" எனக் கூற அரங்கம் சிரிப்பில் நிறைந்தது.

Advertisment

பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார் ரெடின். அவரிடம் விஜய் படம் பார்த்து விட்டாரா? என்ன சொன்னாரு? என கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு, "தளபதி இப்போ அமெரிக்கால இருக்கிறார். அவர் பார்த்திருந்தாலும் நெல்சனிடம் பேசுவார்" என பதிலளித்தார். மேடையில் பேசும்பொழுது ஆயிரம் கோடி வசூல் வரும் என சொல்வது பேராசையாக இருக்காதா? குறித்த கேள்விக்கு, "அது எப்படி பேராசையா இருக்கும். நிறைய நபர்கள் இந்த படத்திற்காக முதலீடு செய்துள்ளார்கள். பணம் நிறைய வசூல் ஆனால் நல்லது தானே" என நகைப்புடன் பதிலளித்தார்.

redin kingsley
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe