Advertisment

சட்டமன்ற வளாகத்திற்குள் ரெடின் கிங்ஸி

redin kingsley suddenly arrives at the Legislative Assembly

Advertisment

தமிழில் நகைச்சுவை நடிகராக வலம் வரும் வருபவர் ரெடின் கிங்ஸிலி. ரஜினி, விஜய், அஜித் என முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்துள்ளார். ஒரே மாடுலேஷைனில் பல படங்களில் டயலாக் பேசி ரசிகர்களை கவர்ந்த இவர், கடைசியாக சந்தானம் நடிப்பில் கடந்த மாதம் வெளியான ‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ் லெவல்’ படத்தில் நடித்திருந்தார்.

இந்த நிலையில் ரெடின் கிங்ஸ்லி சட்டமன்ற வளாகத்திற்கு கையில் பூங்கொத்துடன் வந்தார். திடீரென வந்ததால் அவர் என்ன காரணத்திற்காக வந்தார் என அங்கிருந்தவர்கள் பார்த்தனர். பின்பு அவரே செய்தியாளர்கள் முன்னிலையில், நாடாளுமன்ற மாநிலங்களை தேர்தலுக்கு தி.மு.க.சார்பில் போட்டியிடும் வழக்கறிஞர் வில்சன், இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார். அவர் எனது குடும்ப உறவினர். என்னுடைய வக்கீலும் கூட. அதனால் அவரை வாழ்த்த வந்தேன்” என்றார்.

இன்று வழக்கறிஞர் வில்சனை தவிர்த்து திமுக சார்பில் சல்மா, சிவலிங்கம் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஆகியோரும் வேட்பு மனு தாக்கல் செய்தனர். திரைத்துறையில் இருந்து கமல்ஹாசன் போட்டியிடுவதால் சக கலைஞனாக அவருக்கும் தனது வாழ்த்துக்களை பதிவு செய்தார்.

redin kingsley
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe