/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/350_33.jpg)
இயக்குநர் நெல்சன் தயாரிப்பில் கவின் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ப்ளடி பெக்கர்'. நெல்சனுடன் உதவி இயக்குநராக பணியாற்றிய சிவபாலன் முத்துகுமார் இப்படத்தை இயக்கியுள்ளார். ரெடின் கிங்ஸ்லி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்திற்கு ஜென் மார்டின் என்பவர் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற தீபாவளியன்று(31.10.2024) வெளியாகவுள்ள நிலையில் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் ரெடின் கிங்ஸ்லி பேசுகையில், “என் வாழ்க்கையில் மறக்க முடியாத படம் ப்ளடி பெக்கர். இந்தப் படத்தில் நடித்துக் கொண்டிருந்த போதுதான் எனக்குத் திருமணம் நடந்தது. எல்லோரும் சிறப்பான பணியைக் கொடுத்துள்ளனர். சிவபாலன் தனக்கு என்ன வேண்டும் என்பதை மிகச்சரியாக எடுத்துள்ளார். டிரெய்லருக்கு பாராட்டுகள் கிடைத்து வருகிறது. நிச்சயம் படமும் பெரிய வெற்றி பெறும். நான் வாழும் வாழ்க்கை, சாப்பாடு, டிரஸ் எல்லாமே நெல்சன் சார் கொடுத்தது. அவருக்கு நன்றி” என்றார்.
இதனிடையே கவினை பற்று பேசுகையில், “கவின் மாமா” என்று கலகலப்புடன் பேச ஆரம்பித்த அவர், “இந்த மாதிரி நடிப்பை நான் எதிர்பாக்கவே இல்லை. இந்தப் படத்திற்கு அப்புறம் சினிமாவில் இருக்கிறவர்களும் சரி, இல்லாதவர்களும் சரி கண்டிப்பாக உன் நடிப்பை பாராட்டுவாங்க. தமிழ்நாட்டில் பெரிய அளவில் உனக்கு விருது கிடைக்கும். இந்தப் படம் உனக்கு சிறப்பான படமாக அமையும்” என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)