redhe shyam movie trailer out now

Advertisment

யுவி கிரியேஷன்ஸ் மற்றும் கோபி கிருஷ்ணா மூவிஸ் தயாரிப்பில், பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ராதே ஷ்யாம்’. இப்படத்தில் பிரபாஸிற்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மிகப்பெரிய பட்ஜெட்டில், ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம், தெலுங்கு, இந்தி என இரு மொழிகளில் நேரடியாக எடுக்கப்பட்டு, தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளில் டப் செய்து வெளியிடப்படவுள்ளது. நடிகர் பிரபாஸ் கைரேகை நிபுணராக நடித்துள்ள இப்படம் மார்ச் 3ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் வெளியான படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையேநல்ல வரவேற்பைபெற்றநிலையில் தற்போது 'ராதே ஷ்யாம்' படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. காதல் கலந்த திரில்லர் காட்சிகளைமையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளஇப்படத்தின் ட்ரைலர்பலரின் கவனத்தைப் பெற்றுவருகிறது.