வழக்கமாக தமிழ் சினிமாவில் கல்லூரி தேர்தல் அதை சுற்றிலும் மாணவர்களுக்குள் நடக்கும் காதல் முதல் என பல திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் பல தசாப்தங்களாக வருவது வழக்கம். அதில் சில படங்கள் நல்ல வரவேற்பை பற்றி ரசிகர்களிடையே வெற்றி பெறுவது இயல்பு. தற்போது அந்த வரிசையில் இணைய முயற்சி செய்து உருவாகி இருக்கும் திரைப்படம் இந்த ரெட் லேபிள். இது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா, இல்லையா?
கல்லூரியில் மாணவர் தேர்தல் அறிவிக்கப்படுகிறது. அந்தத் தேர்தலில் போட்டியிட எம்எல்ஏ மகனும் மற்றும் அந்த கல்லூரியில் படிக்கும் நல்ல மாணவனுக்கும் போட்டி ஏற்படுகிறது. கல்லூரியில் இருக்கும் தலைமைக்கும் மாணவர்கள் இடையே ஒரு ஒற்றுமை ஏற்பட்டு நல்ல மாணவனுக்கு அவர்கள் சப்போர்ட் செய்கின்றனர். வழக்கம்போல் எம்எல்ஏ மகன் மிகவும் அட்ராசிட்டி செய்கிறார். இதை எப்படி கையாள்வது என தெரியாத கல்லூரி மாணவர்கள் ஏற்கனவே மாணவர்கள் தேர்தலில் போட்டியிட்டு ஜெயித்த முன்னாள் மாணவரான லெனின் உதவியை நாடுகின்றனர். அவரும் இவர்களுக்கு உதவி செய்ய அந்த நேரம் பார்த்து எம் எல் ஏ ஆர் வி உதயகுமார் மகளான அஸ்மின் லெனினை காதலிக்க அந்த நேரம் கல்லூரி வளாகத்தில் அஸ்மின் முறைமாமன் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார். அந்த கொலை செய்தது யார்? அந்த கொலைக்கும் நாயகனுக்கும் என்ன சம்பந்தம்? தேர்தலில் வெற்றி பெற்றது யார்? என்பதே ரெட் லேபிள் படத்தின் மீதி கதை.
முற்றிலும் புதுமுகங்கள் நடித்து முழுக்க முழுக்க கதையையும் திரைக்கதையையும் முழுமையாக நம்பி அதனை வைத்து உருவாக்கிய இந்த ரெட் லேபிள் திரைப்படம் ஓரளவு வரவேற்பு பெற்றுள்ளது என்றே கூறலாம். கதையும் கதைக்களமும் நாம் ஏற்கனவே பார்த்து பழகியபடி இருந்தாலும் அதனுள் ஒரு விறுவிறுப்பும் பரபரப்பையும் சேர்த்து பார்ப்பவர்களுக்கு அயற்சி ஏற்படாதவாறு முடிந்தவரை நேர்த்தியான காட்சி அமைப்புகளை கொடுத்து படத்தை உருவாக்கி இருப்பது படத்திற்கு சற்றே ப்ளஸ் ஆக அமைந்திருக்கிறது. கதையும் கதை கருவும் நாம் ஏற்கனவே பார்த்து பழகியது போல் இருப்பது மட்டும் படத்திற்கு சற்றே மைனஸ். மற்றபடி சில பல புது முகங்களை வைத்துக்கொண்டு இந்த அளவு படத்தை விறுவிறுப்பாக நகர்த்தி இருப்பது படத்திற்கு மற்றும் ஒரு பிளஸ் ஆக அமைந்திருக்கிறது.
நாயகன் லெனின் தனக்கு கொடுத்த வேலையை நிறைவாக செய்திருக்கிறார். காட்சிகளுக்கு எந்த அளவு நடிப்பு தேவையோ அதை செவ்வன கொடுத்திருக்கிறார். நாயகி அஸ்மின் வழக்கமான நாயகியாக வந்து செல்கிறார். தனக்கு கொடுத்த வேலையை செய்துவிட்டு சென்றிருக்கிறார். வில்லனாக வரும் இயக்குனர் ஆர் வி உதயகுமார் வில்லனாக முத்திரை பதித்திருக்கிறார். இனிவரும் படங்களில் இவரை அதிகமாக வில்லனாக பார்க்கலாம். மற்றபடி படத்தில் பெரும்பாலானவர்கள் புதுமுகங்களாக இருப்பதும் அவரவர்கள் அவரவர் வேலையை செய்திருப்பதும் படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது.
சதீஷ் மெய்யப்பன் ஒளிப்பதிவில் காட்சிகள் நேர்த்தியாக படம் பிடிக்கப்பட்டுள்ளன. கைலாஷ் மேனன் இசையில் பாடல்களை காட்டிலும் பின்னணி இசை ஓகே. என்னதான் மாணவர்கள் தேர்தல் களமாக இருந்தாலும் அதனுள் ஒரு விறுவிறுப்பான த்ரில்லர் அனுபவத்தை சேர்த்து இருப்பது படத்திற்கு பிளஸ் ஆக அமைந்திருக்கிறது. அதேபோல் படம் ஆரம்பித்து கதைக்குள் சென்ற பிறகு விறுவிறுப்பு நிறைந்த படமாக செல்லும் திரைப்படம் போகப்போக கிளைமாக்ஸ் காட்சியில் திருப்புமுனைகளுடன் நிறைவாக முடிகிறது. இதே விஷயம் படம் ஆரம்பித்தது முதல் இறுதி வரை இருக்கும் பட்சத்தில் அதேசமயம் கதையும் கதாபாத்திரங்களும் புதுமையாக கொடுத்திருக்கும் பட்சத்தில் இந்த படம் இன்னமும் நன்றாக பேசப்பட்டு இருக்கும். கதை மாந்தர்களும் கதை சொன்ன விஷயமும் சற்று கிளிஷேவாக இருப்பது படத்திற்கு மைனஸாக அமைந்திருக்கிறது. இருந்தும் மாணவர்கள் தேர்தல் விஷயத்தில் மர்டர் மிஸ்டரி அம்சங்களை சேர்த்திருப்பது படத்தை கதை சேர்க்க உதவ முயற்சி செய்திருக்கிறது.
ரெட் லேபிள் - ஆரம்பம் சுமார் முடிவு சிறப்பு!
Follow Us