Recognition in  Ilayaraja in British movie industry

Advertisment

45 ஆண்டுகளுக்கு மேலாக திரையுலகில் பயணித்துக்கொண்டு இன்றும் தன் இசையால் ரசிகர்கள் மனதில் தனி இடம் பிடித்திருப்பவர் இசையமைப்பாளர் 'இளையராஜா'. தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட பல இந்திய மொழிகளில் இசையமைத்துள்ளார். இவர் தற்போது ‘ஏ பியூட்டிஃபுல் பிரேக்கப்’ என்ற ஆங்கில படத்தில் இசை அமைத்திருக்கிறார். இப்படத்தை கன்னட இயக்குநர் அஜித் வாசன் உஜ்ஜினா இயக்குகிறார். இங்கிலாந்தை மையமாக கொண்டு செயல்படும், 5 நேச்சர்ஸ் மூவிஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் அறிமுக நடிகர் க்ரிஷ் மற்றும் மட்டில்டா ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் சமீபத்தில் நெதர்லாந்தில் நடந்த சர்வதேச படவிழாவில் 'சிறந்த பின்னணி இசை' என்ற பிரிவில் ‘ஏ பியூட்டிஃபுல் பிரேக்கப்’ படித்திற்காக இளையராஜாவிற்கு விருது வழங்கப்பட்டது. இது குறித்து சமூக வலைதளங்களில் சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் இளையராஜாவிற்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இப்படம் இளையராஜா இசையமைப்பில் உருவாகும் 1422-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.