Rebel Teaser Released

Advertisment

ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில், ஞானவேல் ராஜா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நிகேஷ் ஆர்.எஸ். இயக்கத்தில், இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி. பிரகாஷின் நடிப்பில் உருவாகியுள்ள ரிபெல் திரைப்படத்தின் டீசரை நடிகர் சூர்யா இன்று வெளியிட்டார்.

ரிபெல் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்துள்ள நிலையில், தற்போது இறுதி கட்டப் பணிகள் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், அந்தப் படத்தின் டீசரை இன்று நடிகர் சூர்யா தனது சமூகவலைதளப் பக்கமான எக்ஸில் வெளியிட்டார்.

டீசரில், “தமிழுக்காகவே போராடி செத்த ஒருத்தன் இருக்கான். அவன் கதைய சொல்றேன் கேக்கிறியா” எனும் வசனத்துடன் ஜி.வி.பிரகாஷின் அறிமுக இருக்கிறது. இந்த டீசர் தற்போது ரசிகர்களால் கொண்டாடப்பட்டுவருகிறது.

Advertisment

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள கேப்டன் மில்லர், வணங்கான் ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளது.