Advertisment

விஜய் சேதுபதி கூலர்ஸுடன் சுற்றும் காரணம் 

இன்றைய தலைமுறையின் ஆதார்ச நாயகனாக திகழும் நடிகர் விஜய் சேதுபதி ரசிகர்களுடன் எப்போதும் அன்பாக பழகக்கூடியவர். எந்த இடமாக இருந்தாலும் சரி, எவ்வளவு கூட்டமாக இருந்தாலும் சங்கடம் பார்க்காமல் ஒவ்வொரு ரசிகனுக்கும் நேரம் ஒதுக்கி செல்பியா, முத்தமோ வழங்கிவிட்டு தான் தன் அடுத்த வேலையை கவனிப்பார்.

Advertisment

Vijaysethupathi

அந்த அளவு ரசிகர்கள் மேல் பேரன்பு கொண்ட அவர் சில நாட்களாக தான் எங்கு சென்றாலும் கண்ணில் கூலிங் கிளாஸுடன் வலம் வருவதை வழக்கமாக வைத்து வருகிறார். இந்த திடீர் மாற்றம் ஏன் என விசாரித்ததில், விஜய் சேதுபதிக்கு கண்ணில் ஏற்பட்ட கட்டியின் காரணாமாக இயற்கை வைத்தியமான நாமக்கட்டியை பயன்படுத்தி வருகிறார். இதனால் தன் கண்ணை மறைப்பதற்காக அவர் கூலர்ஸை பயன்படுத்தியுள்ளார். விஜய்சேதுபதி, சமந்தா நடிப்பில் 'சூப்பர் டீலக்ஸ்' படம் வரும் 29ஆம் தேதி வெள்ளியன்று வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

super deluxe Vijay Sethupathi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe