Advertisment

'பியார் பிரேமா காதல்' ஆகஸ்ட் 9ஆம் தேதி வெளிவர காரணம் இது தான்

maniyarfamily

ppk

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

Advertisment

ஹரீஷ் கல்யாண் மற்றும் ரைசா வில்சன் இணைந்து நடித்திருக்கும் 'பியார் பிரேமா காதல்' படம் முன்பே அறிவிக்கப்பட்ட ஆகஸ்ட் 10ஆம் தேதிக்கு ஒரு நாள் முன்னதாக, வரும் ஆகஸ்ட் 9ஆம் தேதியே உலகமெங்கும் வெளியாகிறது. யுவன் ஷங்கர் ராஜாவின் அற்புதமான இசையில் உருவாகியுள்ள இப்படத்தை குறித்து உலக அளவிலான டிஸ்ட்ரிபியூஷன் உரிமையை பெற்றிருக்கும் இர்ஃபான் பேசியபோது... "ஆரம்பத்தில் ஆகஸ்ட் 10ஆம் தேதி தான் இந்த திரைப்படத்தை பார்வையாளர்களுக்குக் கொண்டு வர நாங்கள் விரும்பினோம். ஆனால் இசை மற்றும் டிரெய்லருக்கு நம்ப முடியாத வரவேற்பை கண்ட பிறகு, ரசிகர்களுக்கு முன்னதாகவே விருந்து வைக்க வேண்டும் என்பதை உணர்ந்தோம். எனவே ஒரு நாள் முன்னதாகவே ஆகஸ்ட் 9ஆம் தேதி வெளியிட செய்ய முடிவு செய்தோம். யுவன் ஷங்கர் ராஜாவின் 12 பாடல்கள் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பை மிகவும் அதிகமாக்கியுள்ளது. கூடுதலாக, டிரெய்லருக்கும் நல்ல வரவேற்ப்பு கிடைத்துள்ளது. பியார் பிரேமா காதல் ரசிகர்களுக்கு நிச்சயம் பொழுதுபோக்கு மற்றும் உண்மையான காதலின் தருணங்களை கொடுக்கும் என நாங்கள் உறுதியாக நம்புகிறோம்" என்றார்.

Advertisment

style="display:inline-block;"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9546799378">

pyaarpremakadhal
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe