Ready to act in Mahabharata if you make it Saif Ali Khan

பிரபாஸ் நடிப்பில் ஓம் ராவத் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் ‘ஆதிபுருஷ்’. ராமாயணத்தின் ஒரு பகுதியை மையமாக வைத்து உருவாகிவரும் இப்படத்தில் பிரபாஸ் ராமர் கதாபாத்திரத்திலும், கீர்த்தி சனோன் சீதை கதாபாத்திரத்திலும், சையிப் அலிகான் ராவணன் கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர். 3டி தொழில்நுட்பத்தில் உருவாகும் இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் அடுத்த ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி வெளியாகவுள்ளது.

Advertisment

இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே கடும் விமர்சனத்தையும், கிண்டலையும் சந்தித்து வருகிறது. மேலும் கடும் விமர்சனத்தையும் எதிர்ப்புகளையும் சந்தித்து வருகிறது. குறிப்பாக டீசரில் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் காட்சி அமைந்துள்ளதாக கூறி, அயோத்தியின் ராமர் கோவிலின் தலைமை குரு, உத்தரப்பிரதேச துணை முதல்வர்கள் என பல அமைப்பிடம் இருந்து எதிர்ப்புகள் எழுந்துள்ளன.

Advertisment

இந்நிலையில் சையிப் அலிகான் சமீபத்திய பேட்டி ஒன்றில், "மகாபாரதத்தை யாராவது 'லார்ட் ஆப் ரிங்ஸ்' படம் போல் உருவாக்கினால் அதில் நடிக்க நான் ரெடி. இது தொடர்பாக அஜய் தேவ்கனுடன் 'கச்சே தாகே' படத்தின் போதே பேசினோம். இது எங்கள் தலைமுறையில் கனவு படமாக இருக்கும் என நினைக்கிறேன். இந்தியில் உருவானாலும் சரி அல்லது தென்னிந்திய மொழியில் எதுவாக இருந்தாலும் சரி இது போன்று பிரமாண்ட படத்தை உருவாக்குவோம்' என பேசியுள்ளார்.

சையிப் அலிகான் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'விக்ரம் வேதா' படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.