பெரிய பட்ஜெட் படங்களை உருவாக்கும் இயக்குநர் ஆர். சந்துரு

r.chandru next movies update

பிரபல இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் ஆர். சந்துரு, தன் பயணத்தில் திரையுலகிற்குஇன்னும் பல படங்களைத்தரவிருப்பதாகக்கூறியுள்ளார். 400 கோடியில் பல பெரிய பட்ஜெட் படங்களைத் தயாரித்து, கன்னடத் துறையில் பெரிய ஹீரோக்களை அறிமுகப்படுத்தும் அளவுக்கு அவர் வளர்ந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது உருவாக்கத்தில் ‘ஃபாதர்’, ‘பி ஓ கே’, ‘ராம பாணசரிதா’, ‘டாக்’ மற்றும் ‘கப்ஜா 2’ போன்ற படங்கள் வெளியாகவுள்ளது.

சந்துருவின் ஆர்.சி. ஸ்டுடியோஸ் உடன் பாலிவுட் தயாரிப்பாளர் ஆனந்த் பண்டிட் கை கோர்த்துள்ளார். ஆனந்த் பண்டிட் ‘கப்சா 2’ மூலம் கன்னடத்திரையுலகில் நுழைகிறார். தயாரிப்பாளர் அலங்கார் பாண்டியன் சந்துருவுடன் இணைந்து 5 படங்களைத் தயாரிக்கவுள்ளார். பிரஸ்மீட்டில் கர்நாடக முதல்வர் சித்தராமையா முதன்மை விருந்தினராக கலந்து கொண்டுள்ளார். இதில் உபேந்திரா மற்றும் கிச்சா சுதீப் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் கலந்து கொண்டுள்ளனர். அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த ஐந்து படங்களையும், ஆர்.சி ஸ்டுடியோஸ் சார்பில் ஆர். சந்துரு உருவாக்கவுள்ளார். மேலும் இப்படங்கள் பல மொழிகளிலும் வெளியாகவுள்ளது.

Kannada movie
இதையும் படியுங்கள்
Subscribe