/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/rc_1.jpg)
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ஷங்கர், அடுத்ததாக பிரபல தெலுங்கு நடிகர் ராம்சரணை வைத்து படம் இயக்குகிறார். தற்காலிகமாக 'ராம்சரண் 15' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை பெரும் பொருட்செலவில் தில் ராஜு தயாரிக்கிறார். இப்படத்திற்கான கதையை கார்த்திக் சுப்புராஜ் எழுத, தமன் இசையமைக்கிறார். இப்படத்தில் ராம் சரண் இரட்டை வேடங்களில் நடித்து வருவதாகக் கூறப்படும் நிலையில், அவருக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் குறித்ததகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, 'ராம்சரண் 15' படம் அடுத்தாண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாககூறப்படுகிறது. இப்படத்தின் பணிகள் முடிந்த கையோடுஇயக்குநர் ஷங்கர் கமல்ஹாசன் நடிக்கும் 'இந்தியன் 2' படத்தின் பணியில் ஈடுபடவுள்ளதாகசினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/28/2026-02-28t064820155z-nlogo-2026-02-28-12-18-18.jpg)