RC15

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ஷங்கர், அடுத்ததாக நடிகர் ராம்சரணை வைத்து படம் இயக்குகிறார். தற்காலிகமாக 'ராம்சரண் 15' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். இப்படத்திற்கான கதையை கார்த்திக் சுப்புராஜ் எழுத, தமன் இசையமைக்கிறார். இப்படத்தில் ராம் சரண் இரட்டை வேடங்களில் நடிக்கவுள்ளதாகக் கூறப்படும் நிலையில், அவருக்கு ஜோடியாக நடிக்க கியாரா அத்வானி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

Advertisment

இப்படம் குறித்த அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னரே வெளியிடப்பட்ட நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று (08.09.2021) பூஜையுடன் தொடங்கியது. இந்த நிலையில், இப்படத்தின் தலைப்பு குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஷங்கர் - ராம்சரண் கூட்டணியில் உருவாகும் படத்திற்கு ‘விஸ்வம்பரா’ எனப் பெயரிட படக்குழு முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. ‘விஸ்வம்பரா’ என்பது தமிழில் 'உலகளாவிய' எனப் பொருள்படும்.

Advertisment