Advertisment

Rayar Parambarai - Director Ramnath  Interview

நக்கீரன் ஸ்டூடியோ சார்பாக ‘ராயர் பரம்பரை’ படத்தின் குழுவினரைச் சந்தித்தோம். இயக்குநர் ராம்நாத், நடிகர் கிருஷ்ணா மற்றும் நடிகை சரண்யா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். படப்பிடிப்பில் நடந்த சுவாரசியமான விசயங்கள் மற்றும் நடித்த அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொண்டனர்.

Advertisment

இயக்குநர் ராம்நாத்பேசியதாவது, “ஒவ்வொரு கதையும் அதற்கான நடிகர்களைத்தானாகக் கேட்கும். அதை வைத்து தான் நடிகர்கள் தேர்வு எப்போதுமே நடைபெறும். அப்படித்தான் இந்தப் படத்துக்கும் நடைபெற்றது. ஆர்யா சார் நான் கடவுள் படத்துக்குப் பிறகு பாஸ் என்கிற பாஸ்கரன் படம் செய்தார். அப்போது அவருக்கு அது புதிதாக இருந்தது.

அதுபோல் இந்தக் கதை கிருஷ்ணா சாருக்கு புதிதாக இருக்கும். கதையோடு ஒட்டிய காமெடி தான் இந்தப் படத்தில் இருக்கும். நடிகைக்காக பல தேடல்கள் நடந்து இறுதியில் சரண்யா அவர்களைத் தேர்ந்தெடுத்தோம். அவருடைய முடியை போட்டோவில் பார்த்து தேர்ந்தெடுத்தோம். ஆனால் நேரில் அவருடைய முடி வேறு மாதிரி இருந்தது.