நக்கீரன் ஸ்டூடியோ சார்பாக ‘ராயர் பரம்பரை’ படத்தின் குழுவினரைச் சந்தித்தோம். இயக்குநர் ராம்நாத், நடிகர் கிருஷ்ணா மற்றும் நடிகை சரண்யா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். படப்பிடிப்பில் நடந்த சுவாரசியமான விசயங்கள் மற்றும் நடித்த அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொண்டனர்.
சரண்யா பேசியதாவது, “இந்தப் படத்தின் செட் எப்போதும் கலகலப்பாகவே இருந்தது. படப்பிடிப்பில் எந்த டென்ஷனும் இல்லை. இந்தப் படத்தில் என்னுடைய கேரக்டர் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருந்தது. மலையாளத்தில் நான் சீரியஸ் படங்களில் தான் நடித்தேன். இதில் க்யூட்டான ஒரு கேரக்டரில் நடித்துள்ளேன்.
இந்தப் படத்தில் கே.ஆர். விஜயா அம்மா உட்பட பல சீனியர் நடிகர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் அவ்வளவு ஈடுபாட்டுடன் நடித்துக் கொடுத்தார்கள். கலகலப்பாக கல்யாண வீடு போல் இருந்தது எங்களுடைய செட்.