ravikumar speech in ayalaan teaser launch

'இன்று நேற்று நாளை' பட இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 2 வருடங்களுக்கும் மேலாக உருவாகி வரும் படம் 'அயலான்'. இப்படத்தில், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்க ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு திரைக்கு வருகிறது. டீசர் நேற்று மாலை வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. டீசர் விழாவில் படக்குழுவினர் கலந்துகொண்டு நிறைய விஷயங்களைப் பகிர்ந்திருந்தனர்.

Advertisment

அப்போது இயக்குநர் ரவிக்குமார் பேசுகையில், "அயலான் படத்திற்கு காத்திருந்த காலக்கட்டம் குறித்து அனைவரும் பேசினார்கள். இதை மிதமாக கடந்து வர உதவியவர்கள் என் குடும்பமும் நண்பர்களும்தான். அவர்களின் வார்த்தைகளில் ஒரு வலிமை இருக்கிறது. அந்த வலிமை தான் இவ்வளவு தூரம் கடத்திக்கிட்டு வந்திருக்கு. இதற்கு பின்பு மிகப்பெரிய நம்பிக்கையாக இருந்தவர் சிவகார்த்திகேயன். அவர் இந்தக் கதையின் மீது வைத்த நம்பிக்கையில்தான் இத்தனை வருடம் பல சவால்களைக் கடந்து பயணித்து வந்தோம்.

Advertisment

நீரவ் ஷா, முத்துராஜ் சார் போன்ற பெரிய மாஸ்டர்கள் இந்தப் படத்தில் வேலை பார்த்துள்ளது எனக்குப் பெருமை. அவர்கள்தான் என்னை வழிநடத்தினார்கள். ரஹ்மான் சார்தான் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் என்று சொன்னபோது மகிழ்ச்சியாகவும் பதட்டமாகவும் இருந்தது. ரஹ்மான் சார் நிறைய சுதந்திரம் கொடுத்துள்ளார். ரஹ்மான் சாரின் ரசிகன் நான். அவர் என் படத்திற்கு இசையமைத்திருப்பது மகிழ்ச்சி. வி.எஃப்.எக்ஸ். பிஜாய்க்கு நன்றி. நடிகர்கள் யோகிபாபு, பாலசரவணன், ஷரத் எல்லோருக்கும் நன்றி. என்னுடைய இயக்குநர் குழுவுக்கும் நன்றி" என்றார்.