Advertisment

கிரிக்கெட் வீரர் பின்னணி குரலில் வெளியான ஜி.வி பிரகாஷ் பட ட்ரைலர்

ravichandran ashwin gives voice over to gv prakash aishwarya rajesh dear movie trailer

Advertisment

ஜி.வி. பிரகாஷ் நடிகராக ரெபல், இடி முழக்கம், 13, கள்வன், டியர், கிங்ஸ்டன் உள்ளிட்ட படங்களைக் கைவசம் வைத்துள்ளார். இசையமைப்பாளராக தங்கலான், அமரன், சூர்யாவின் 43வது படம் உள்ளிட்ட படங்களில் பணியாற்றுகிறார். இதில் ரெபல் படம் கடந்த மாதம் 22ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. பின்பு கள்வன் படம் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்திற்கு வைரமுத்து, வசந்தபாலன், ஆர்யா உள்ளிட்ட பல்வேறு திரைப்பிரபலங்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

இப்படி தொடர்ந்து ஜி.வி பிரகாஷ் நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. இந்த சூழலில் டியர் படமும் ரிலீஸுக்கு தயாராகியுள்ளது. ஆனந்த ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இப்படத்தில் ஜி.வி பிரகாஷுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். வருண் திரிபுரனேனி, அபிஷேக் ராமிசெட்டி, பிரித்விராஜ் என மூன்று பேர் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷே இசையமைத்துள்ளார்.

ravichandran ashwin gives voice over to gv prakash aishwarya rajesh dear movie trailer

Advertisment

இந்த நிலையில் இப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. ட்ரைலரில் இந்திய கிரிக்கெட் வீரர் அஷ்வின் ரவிச்சந்திரன் பிண்ணி குரல் கொடுத்துள்ளார். ஜி.வி பிரகாஷுக்கும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கும் திருமணம் நடக்கிறது. ஐஸ்வர்யா ராஜேஷ் அதிக அளவு குறட்டை விடும் நபராக இருக்கிறார். அதனால் இருவருக்கும் ஏற்படும் பிரச்சனைகளை மையப்படுத்தி காமெடி கலந்த ட்ராமாவாக இப்படம் உருவாகியுள்ளது போல் அமைந்துள்ளது. இப்படம் வருகிற 11ஆம் தேதி திரைக்கு வருகிறது. ட்ரைலர் சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது. இதே குறட்டை பிரச்சனையை மையப்படுத்தி மணிகண்டன் நடிப்பில் கடந்த ஆண்டு குட் நைட் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Ravichandran Ashwin aishwarya rajesh GV prakash
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe