சென்னை ஈசிஆரில் ரவி மோகன் மற்றும் ஆர்த்தி இருவரும் சொகுசு பங்களா ஒன்றில் வாழ்ந்து வந்தனர். இப்போது இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். விவாகரத்து கோரி ரவி மோகன் தொடர்ந்த வழக்கு நிலுவையில் இருக்கிறது. 

Advertisment

இதனிடையே இருவரும் கணவன் மனைவியாக இருந்த போது அந்த சொகுசு பங்களாவில் வாழ்ந்துள்ள நிலையில் கடந்த 10 மாதங்களாக தவணை செலுத்தாமல் இருந்தனர். இதனால் பங்களாவை ஜப்தி செய்ய ஹெச்.டி.எஃப்.சி. வங்கி அந்த பங்களாவிற்கு கடந்த ஆகஸ்ட் மாதம் நோட்டிஸ் அனுப்பியது. அந்த நோட்டிஸ் கொரியர் ஊழியர் மூலம் அந்த பங்களாவிற்கு சென்ற நிலையில் அதை வாங்க ரவி மோகன் தரப்பு மறுத்துவிட்டனர். ஆனால் நோட்டிஸை வங்கியில் வந்து பெற்றுக் கொள்வதாக கூறியதாக அப்போது தகவல் வெளியானது. 

இந்த நிலையில் அந்த பங்களா வீட்டிற்கு வங்கி ஊழியர்கள் நேரில் சென்று தற்போது ஜப்தி நோட்டிஸ் ஒட்டியுள்ளனர். பின்பு அவர் புதிதாக ஆரம்பித்த ரவி மோகன் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் அலுவலகத்திலும் வங்கி ஊழியர்கள் நோட்டிஸ் ஒட்டினர். இந்த அலுவலகம் ஆழ்வார்பேட்டையில் இருக்கும் நிலையில் நோட்டிஸ் ஒட்டும்போது அலுவலக ஊழியர்கள் அந்த நோட்டீஸை கிழித்தனர். அதை படப்பிடித்த செய்தியாளர்களுடன் அலுவலக ஊழியர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது பரபரப்பு காணப்பட்டது.