சென்னை ஈசிஆரில் ரவி மோகன் மற்றும் ஆர்த்தி இருவரும் சொகுசு பங்களா ஒன்றில் வாழ்ந்து வந்தனர். இப்போது இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். விவாகரத்து கோரி ரவி மோகன் தொடர்ந்த வழக்கு நிலுவையில் இருக்கிறது. 

Advertisment

இதனிடையே இருவரும் கணவன் மனைவியாக இருந்த போது அந்த சொகுசு பங்களாவில் வாழ்ந்துள்ள நிலையில் கடந்த 10 மாதங்களாக தவணை செலுத்தாமல் இருந்துள்ளனர். இதனால் பங்களாவை ஜப்தி செய்ய ஹெச்.டி.எஃப்.சி. வங்கி அந்த பங்களாவிற்கு நோட்டிஸ் அனுப்பியுள்ளது. அந்த நோட்டிஸ் கொரியர் ஊழியர் மூலம் அந்த பங்களாவிற்கு சென்ற நிலையில் அதை வாங்க ரவி மோகன் தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது. பின்பு நோட்டிஸை வங்கியில் வந்து பெற்றுக் கொள்வதாக கூறி ஊழியரை ரவி மோகன் தரப்பு திருப்பி அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. 

ஏற்கனவே ரவி மோகனுக்கு எதிராக பாபி டச் கோல்டு யுனிவர்சல் என்ற தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கில் ரவி மோகன் சொத்துகளை முடக்க, மனுதாரர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதற்கு நீதிமன்றம் மனுவாக தாக்கல் செய்யும் பட்சத்தில் கோரிக்கை குறித்து விசாரிக்கப்படும் என நீதிமன்றம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.