குழந்தை நட்சத்திரமாக இரண்டு படங்களில் தோன்றி ‘ஜெயம்’ படம் மூலம் நாயகனாக அறிமுகாகி பின்பு அந்த பட டைட்டிலே அடைமொழியாக மாறி பின்பு அதே பெயருடன் பல்வேறு படங்களில் நடித்து பிரபல நடிகராக வலம் வந்தவர் ஜெயம் ரவி. சமீபகாலமக ரவி மோகன் எனத் தனது பெயரை மாற்றிக்கொண்டு தயாரிப்பாளராகவும் இயக்குநராகவும் ஒரு ஆல்பம் பாடலுக்கு பாடல் எழுதியதன் மூலம் பாடலாசிரியராகவும் உருவெடுத்தார்.

Advertisment

இப்போது ‘ப்ரோ கோட்’ என்ற படத்தை தயாரித்து நடித்து வருகிறார். மேலும் சிவகார்த்திகேயன் - சுதா கொங்கரா கூட்டணியில் உருவாகும் ‘பராசக்தி’ படத்தில் வில்லனாக நடிக்கிறார். அதோடு கணேஷ் பாபு இயக்கத்தில் ‘கராத்தே பாபு’ என்ற படத்திலும் அறிமுக இயக்குநர் புவனேஷ் அர்ஜூனன் இயக்கத்தில் ‘ஜீனி’ படத்திலும் நாயகனாக கவனம் செலுத்தி வருகிறார். அதே சமயம் யோகி பாபுவை வைத்து ‘ஆன் ஆர்டினரி மேன்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். 

இந்த நிலையில் அவர் இயக்கும் படத்தின் புரொமோ இன்று ரவி மோகனின் பிறந்தநாளை முன்னிட்டு தற்போது வெளியாகியுள்ளது. அதில் வெளிநாட்டில் யோகிபாபுவை அழைத்திருக்கும் ரவி மோகன், அவரிடம் படம் இயக்கப்போவதாக சொல்கிறார். அதெல்லாம் எதுக்கு சார் என யோகிபாபு கலாய்க்க, நீங்க தான் ஹீரோ என்றதும் இந்தியாவிலேயே நீங்க தான் சார் பெஸ்ட் டைரக்டர் உங்கள மாரி ஒரு நல்ல டைரக்டரத் தான் உலகமே தேடிக்கிட்டு இருக்கு என பல்டியடித்து புகழ்கிறார். ஆனால் கேரக்டர் கிடைக்கவில்லை எனக் கூறி காஸ்டியூம் ரூமிற்குள் சென்று பல விதமான காஸ்டியூமை போடச் சொல்லி ரவி மோகன் யோகி பாபுவிடம் கேட்கிறார். 

உடனே உள்ளே சென்று விண்வெளி வீரர், பாக்ஸின் வீரர், கிரிக்கெட் வீரர் என பலவிதமான கேரக்டரை போட்டு காண்பிக்கிறார். எதுவுமே பிடிக்காத ரவி மோகன் கடைசியில் யோகி பாபு சாதாரணமாக வரும் லுங்கி பனியனுடன் வரும் கெட்டப்பை பார்த்து மிரண்டு கேரக்டர் கிடைத்துவிட்டதாக சொல்கிறார். மேலும் அவர்கள் இரண்டு பேரும் நடித்த ‘கோமாளி’ பட டயலாக்கான ‘வா மச்சா வா மச்சா..’ டயலாக்கை பேசி, எக்ஸ்ட்ராடினரி என புகழ்கிறார். அதோடு ‘ஒரு ஆர்டினரி மேனுடைய கேரக்டரை விட எக்ஸ்ட்ராடினரியான கேரக்டர் வேற என்ன இருக்கு’ என சொல்லி முடிக்கிறார். உடனே பட டைட்டில் அறிமுகாகிறது. இந்த புரொமோ தற்போது ரசிகர்களை கவர்ந்துள்ளது. 

Advertisment