ரவி மோகனின் தயாரிப்பு நிறுவனமான ‘ரவி மோகன் ஸ்டூடியோஸ்’ அறிமுக விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடந்தது. இதில் ரவி மோகன், அவரது தோழி பாடகி கெனிஷா, பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார், கார்த்தி, சிவகார்த்திகேயன், எஸ்.ஜே.சூர்யா என ஏகப்பட்ட திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் மேடையில் பேசிய ரவி மோகன் கெனிஷா பற்றி கூறுகையில் கொஞ்சம் எமோஷ்னலாக பேசினார். அவர் கூறிய வார்த்தைகளை கேட்டு கெனிஷாவும் கண்கலங்கினார். ரவி மோகன் பேசியதாவது, “எனக்கும் சில நெகட்டிவிட்டி வந்தது. என் சொத்துகள் முடக்கப்படுவதாக செய்திகள் வெளியானது. ஆனால் அப்படி ஒன்றும் இல்லை. என் சொத்து இங்க வந்திருப்பவர்கள் தான். காசு பணம் சம்பாதிப்பதெல்லாம் சொத்து கிடையாது. இந்த சொத்தை யார் சம்பாதிக்காறானோ அவன் தான் வாழ்க்கையில் வின்னர்.
இந்த விழா நடப்பதற்கு முழு காரணம் கெனிஷா தான். அவங்களுக்கு ரொம்ப நன்றி. அவர் இந்த நிறுவனத்தில் ஒரு பார்ட்னர். ஒரு மனுஷன் ஒரு இடத்தில் சிக்கிக்கொள்ளும் போது கடவுள் ஒரு விஷயத்தை அனுப்புவார். அது காசு, பொருள், வாகனம்... என எதுவாகக் கூட இருக்கலாம். அந்த மாதிரி கடவுள் கொடுத்த ஒரு கிஃப்ட் தான் எனக்கு கெனிஷா. நான் யாருன்னு எனக்கே உணர வச்சது அவங்க தான். அவங்கள மாதிரி எல்லார் வாழ்க்கையிலும் ஒருத்தவங்க இருகக்னும்னு ஆசைப்படுறேன்” என்றார். இதை கேட்டுக் கொண்டிருந்த கெனிஷா, எமோஷ்னலாகி கண்கலங்கினார்.