/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/178_16.jpg)
போஜ்புரி திரையுலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் ரவி கிஷன். இவர் பா.ஜ.கவின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் உள்ளார். அண்மையில் இவர் அளித்த பேட்டியில் அனுராக் காஷ்யப் இயக்கத்தில் வெளியான 'கேங்ஸ் ஆஃப் வாஸிப்பூர்' படத்தில் நடிக்க வாய்ப்பு வந்து அதைத்தவறவிட்டதாகத்தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், "கேங்ஸ் ஆஃப் வாஸிப்பூர் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அப்போது பாலில் குளிப்பது, ரோஜா இதழ்கள் நிறைந்த மெத்தையில் தூங்குவது எனது வழக்கமாக இருந்ததால் தினமும் குளிப்பதற்கு 25 லிட்டர் பால் தயார் செய்யச் சொன்னேன். அதனை அப்படக்குழுவினால் செய்து கொடுக்க முடியவில்லை. இதன் காரணமாக என்னை அப்படத்தில் சேர்க்கவில்லை.
பாலில் குளித்து, ரோஜா இதழ்கள் நிறைந்த மெத்தையில் உறங்கினால் மக்கள் நம்மைப் பற்றிப் பேசுவார்கள் என நினைத்தேன். நான் என்னைப் பெரிய நட்சத்திரமாக நினைத்துக் கொண்டேன்" என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)