Advertisment

மாமன்னன் - வரவேற்புக்கு ரியாக்ட் செய்த ரவீனா

raveena react his  maamannan character celebrated by fans in social media

Advertisment

மாரி செல்வராஜ் இயக்கத்தில் ரெட் ஜெயண்ட் தயாரிப்பில் உதயநிதி, கீர்த்தி சுரேஷ், வடிவேலு, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஜூன் 29 ஆம் தேதி வெளியானது 'மாமன்னன்' படம். உதயநிதி நடிப்பில் கடைசிப் படமாக வெளியாகியுள்ள இப்படம், வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. தமிழில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியானது.

இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் 27 ஆம் தேதி நெட் ஃபிலிக்ஸ் ஓடிடியில் வெளியான நிலையில், அந்த தளத்தில் தற்போது வரை இந்திய அளவில் முதல் இடத்தில் உள்ளது. படத்தில் பணியாற்றிய நடிகர்கள் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் பாராட்டியிருந்தனர். குறிப்பாக வடிவேலு நடிப்பையும் ஃபகத் ஃபாசில் கதாபாத்திரத்தையும் ரசிகர்கள் கொண்டாடினார்கள்.

மேலும் ஃபகத் ஃபாசில் கதாபாத்திரத்திற்கு வெவ்வேறு பாடல்களை எடிட் செய்து பகிர்ந்து வந்தனர். அதோடு ஃபகத் ஃபாசில் மனைவி கதாபாத்திரமான ஜோதியாக நடித்துள்ள ரவீனா கதாபாத்திரத்தையும் புகழ்ந்து வந்தனர். இந்நிலையில் நடிகையும் டப்பிங் கலைஞருமான ரவீனா, தனதுகதாபாத்திரத்திற்கு கிடைத்த வரவேற்பைப் பார்த்து ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவில், "இந்த பாத்திரத்திற்கு இவ்வளவு அன்பு வரும் என்று கனவில் கூட எதிர்பார்க்கவில்லை. ஜோதி எப்போதும் என் இதயத்திற்கு நெருக்கமாக இருப்பாள்" எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் மாரி செல்வராஜ் மற்றும் ஃபகத் ஃபாசிலுக்கு நன்றி தெரிவித்திருந்தார்.

Advertisment

மற்றொரு பதிவில், "கடந்த 3 நாட்களில், அனைத்து மீம்கள் மற்றும் எடிட்களை கண்டு ரசித்தேன். வசனமில்லாமல், திரையில் குறைவான நேரம் தோன்றினாலும், அது ஒரு பிரச்சினையில்லை என்பதை நம்பினேன். உங்களின் அன்பு என்னுடைய நம்பிக்கை சரி என்பதை நிரூபித்துள்ளது" எனக் குறிப்பிட்டிருந்தார்.

mari selvaraj maamannan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe