Skip to main content

'2.0 படத்தில் ஏமி ஜாக்சனுக்கு டப்பிங் பேசியது பெரிய சவாலாக இருந்தது'  - ரவீணா ரவி

Published on 27/10/2018 | Edited on 27/10/2018
raveena ravi

 

சினிமாவில் அழகான மற்றும்  இனிமையான குரல் எப்போதுமே ஒரு நடிகைக்கு முக்கியமான அங்கமாக இருக்கிறது. தன்னுடைய தனித்துவமான உச்சரிப்புகளால், பல முன்னணி கதாநாயகிகளுக்கு குரல் கொடுத்த ரவீணா ரவி, தற்போது நடிகையாகவும் மாறியிருக்கிறார். பி.ஆர் டாக்கீஸ் கார்ப்பரேஷன் மற்றும் வைட் மூன் டாக்கீஸ் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தில் சுரேஷ் ரவி மற்றும் ரவீணா ரவி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, ஆர்.டி.எம் படத்தை இயக்கியிருக்கிறார். மைம் கோபி, கல்லூரி வினோத் மற்றும் சில பிரபல நடிகர்கள் முக்கிய பாத்திரங்களில் நடித்திருக்க்கும் இப்படம் குறித்து ரவீணா ரவி பேசும்போது....

 

 

 

"படங்களுக்கு டப்பிங் செய்வதில் சில சவால்கள் உள்ளன. நாம் டப்பிங் பேசும் பெண் கதாபாத்திரங்களின் இயல்புகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அப்போது தான் எந்த காட்சிக்கு எப்படி பேச வேண்டும் என்பது நமக்கு கச்சிதமாக தெரியும். 2.0 படத்தில் ஏமி ஜாக்சனுக்கு டப்பிங் செய்தது மிகப்பெரிய சவாலாக இருந்தது. காரணம், நான் டப்பிங் பேசும்போது, அது முழுக்க க்ரீன்மேட்  காட்சிகளாக இருந்தது. அதன் சூழலை கற்பனை செய்து சரியான உணர்வை கொடுக்க நிறைய சிரமப்பட்டேன். மேலும் என் முதல் படமான 'ஒரு கிடாயின் கருணை மனு' படத்தில் நான் நடித்த கதாபாத்திரத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்டது இந்த கதாபாத்திரம். கதாநாயகனின் மனைவியாக, வேலைக்கு போகும் ஒரு பெண் கதாபாத்திரத்தில் நான்  நடித்திருக்கிறேன். என் வாழ்வில் நடக்கும் அதிர்ச்சிகரமான சம்பவம் வாழ்க்கையின் போக்கை மாற்றுகிறது. உண்மையாக என் வாழ்க்கையில் அத்தகைய சூழ்நிலைகளை நான் எதிர்கொண்டதில்லை. அதனால் நடிப்பு பயிற்சி மூலம் என்னை தயார் செய்ய வேண்டியிருந்தது" என்றார்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆர்வம் காட்டாத ரஜினி... விழாவை ரத்து செய்த லைகா ! 

Published on 08/01/2019 | Edited on 08/01/2019
2.0

 

 

ரஜினிகாந்த் - ஷங்கர் கூட்டணியில் உருவான '2.0' படம் கடந்த நவம்பர் 29ஆம் தேதி 3டி தொழில்நுட்பத்தில் வெளியாகி உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்று வசூல் சாதனை நிகழ்த்தியது. இப்படம் இதுவரை சுமார் ரூ.750 கோடி வசூலைத் தாண்டி இன்னமும் நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் வெற்றி விழாவை பெரிய அளவில் கொண்டாட தயாரிப்பு தரப்பு திட்டமிட்டது. ஆனால் இதில் ரஜினிகாந்த் அதிகம் ஆர்வம் காட்டாததால் ரஜினி இல்லாமல் வெற்றியை எப்படி கொண்டாடுவது என்று முடிவெடுத்து அனைத்து கொண்டாட்டத்தையும் தற்போது ரத்து செய்துள்ளது லைகா நிறுவனம்.

 

 

Next Story

ஒரே வாரத்தில் 500 கோடி வசூல் செய்த 2.0...சாதனை மேல் சாதனை படைப்பு 

Published on 06/12/2018 | Edited on 06/12/2018
2.0

 

 

 

ரஜினிகாந்த் - ஷங்கர் கூட்டணியில் சமீபத்தில் வெளியான 2.0 படம் முதல் வார வசூல் ரூ.500 கோடியை தாண்டியுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தமிழ் படங்களிலேயே அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை இப்படம் நிகழ்த்தியுள்ளது. மேலும் அதிவேகமாக இச்சாதனையை நிகழ்த்திய படமாகவும் இது அமைந்துள்ளது. இன்னும் அடுத்தடுத்த வாரங்களில் வசூல் ரூ.1000 கோடியை விரைவில் எட்டும் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே '2.0' படம் வரும்  2019 மே மாதம் சீனாவில் பிரம்மாண்டமாக 10,000 திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

2.0