Advertisment

இயக்குநருடன் காதலில் விழுந்த ரவீனா ரவி 

raveena ravi loves director devan

Advertisment

பிரபல டப்பிங் கலைஞரான ஸ்ரீஜா ரவியின் மகள் ரவீனா ரவி. சாட்டை படம் மூலம் இவரும் டப்பிங் கலைஞராக அறிமுகமானார். ஐ படத்தின் எமி ஜாக்சனுக்கு இவர் பேசிய வசனங்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது. இதையடுத்து மலையாள படங்களில் டப்பிங் கலைஞராக பணியாற்றினார்.

டப்பிங் கொடுப்பதை தாண்டி, ஒரு கிடாயின் கருனை மனு படத்தின் மூலம் நடிகையாகவும் எண்ட்ரி கொடுத்தார். பின்பு லவ் டுடே, மாமன்னன் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தார். இந்த நிலையில் தனது காதலரை அறிமுகப்படுத்தியுள்ளார். மலையாள இயக்குநர் தேவன் என்பவரை காதலிப்பதாக அவருடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து அறிவித்துள்ளார்.

இயக்குநர் தேவன் மலையாளத்தில் கடந்த ஜூலையில் வெளியான வாலாட்டி படத்தின் மூலம் அறிமுகமானார். பின்பு பைங்கிலி என்ற தலைப்பில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்த சூழலில் இவருக்கும் ரவீனா ரவிக்கும் விரைவில் திருமணம் நடக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe