ADVERTISEMENT

தெலுங்கில் உருவாகும் 'ராட்சசன் 2'... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

11:44 AM Jul 14, 2021 | sivar@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

ராம்குமார் இயக்கத்தில், விஷ்ணு விஷால், அமலாபால் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான படம் ‘ராட்சசன்’. திரில்லர் பாணியில் உருவாகியிருந்த இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. தமிழில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, இப்படம் தெலுங்கில் ‘ராக்‌ஷஸுடு’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸ், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான இப்படத்தை ரமேஷ் வர்மா இயக்கினார்.

தெலுங்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகவுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. முதல் பாகத்தை இயக்கிய ரமேஷ் வர்மாவே இரண்டாம் பாகத்தையும் இயக்கவுள்ளார். முதல் பாகத்தைத் தயாரித்த சத்யநாரயணா கோனேரு இப்படத்தைத் தயாரிக்க, முதல் பாகத்தில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்களே இரண்டாம் பாகத்திலும் பணியாற்ற உள்ளனர்.

தற்போது இப்படத்திற்கான நடிகர்கள் தேர்வு நடைபெற்றுவருகிறது. ‘ராக்‌ஷஸுடு’ 2ஆம் பாகம் குறித்து போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ள படக்குழு, விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. தமிழில் ‘ராட்சசன்’ படத்தை இயக்கிய ராம்குமார், அடுத்ததாக நடிகர் தனுஷை வைத்து படம் இயக்கவுள்ளார். அப்படத்தினை முடித்துவிட்டு ‘ராட்சசன்’ படத்தின் இரண்டாம் பாகத்தை தமிழில் இயக்கும் திட்டத்தில் அவர் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT