Skip to main content

தெலுங்கில் உருவாகும் 'ராட்சசன் 2'... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Published on 14/07/2021 | Edited on 14/07/2021

 

Rakshasudu 2

 

ராம்குமார் இயக்கத்தில், விஷ்ணு விஷால், அமலாபால் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான படம் ‘ராட்சசன்’. திரில்லர் பாணியில் உருவாகியிருந்த இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. தமிழில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, இப்படம் தெலுங்கில் ‘ராக்‌ஷஸுடு’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸ், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான இப்படத்தை ரமேஷ் வர்மா இயக்கினார்.

 

தெலுங்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகவுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. முதல் பாகத்தை இயக்கிய ரமேஷ் வர்மாவே இரண்டாம் பாகத்தையும் இயக்கவுள்ளார். முதல் பாகத்தைத் தயாரித்த சத்யநாரயணா கோனேரு இப்படத்தைத் தயாரிக்க, முதல் பாகத்தில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்களே இரண்டாம் பாகத்திலும் பணியாற்ற உள்ளனர்.

 

தற்போது இப்படத்திற்கான நடிகர்கள் தேர்வு நடைபெற்றுவருகிறது. ‘ராக்‌ஷஸுடு’ 2ஆம் பாகம் குறித்து போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ள படக்குழு, விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. தமிழில் ‘ராட்சசன்’ படத்தை இயக்கிய ராம்குமார், அடுத்ததாக நடிகர் தனுஷை வைத்து படம் இயக்கவுள்ளார். அப்படத்தினை முடித்துவிட்டு ‘ராட்சசன்’ படத்தின் இரண்டாம் பாகத்தை தமிழில் இயக்கும் திட்டத்தில் அவர் உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் விஷ்ணு விஷால்

Published on 05/02/2024 | Edited on 05/02/2024
vishnu vishal new movie with arunraja kamaraj

லால் சலாம், மோகன்தாஸ், ஆர்யன் உள்ளிட்ட படங்களை விஷ்ணு விஷால் கைவசம் வைத்துள்ளார். மேலும் ராம்குமார் இயக்கத்தில் ஒரு படம் நடித்து வருகிறார். இதில் லால் சலாம் படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி வரும் நிலையில், ரஜினி சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற பிப்ரவரி 9 ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

இதனைத் தொடர்ந்து இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா உள்ளிட்ட சில படங்களை இயக்கிய கோகுல் இயக்கத்தில் ஒரு படமும், கட்டா குஸ்தி பட இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கத்தில் ஒரு படமும் தயாரித்து நடிக்கவுள்ளார். 

இந்த நிலையில், தற்போது விஷ்ணு விஷால் நடிக்கும் புது படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் இப்படத்தை தயாரிக்கிறார். ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தினை பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது. இப்படத்தின் தலைப்பு, படத்தில் பணியாற்றவுள்ள நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் படம் குறித்த மற்ற விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

Next Story

மீண்டும் இணைந்த வெற்றிக் கூட்டணி

Published on 23/01/2024 | Edited on 23/01/2024
vishnu vishal once again joined with gatta kusthi movie director

லால் சலாம், மோகன்தாஸ், ஆர்யன் உள்ளிட்ட படங்களை விஷ்ணு விஷால் கைவசம் வைத்துள்ளார். மேலும் ராம்குமார் இயக்கத்தில் ஒரு படம் நடித்து வருகிறார். இதில் லால் சலாம் படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி வரும் நிலையில், ரஜினி சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற பிப்ரவரி 9ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

இதனைத் தொடர்ந்து இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா உள்ளிட்ட சில படங்களை இயக்கிய கோகுல் இயக்கத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இதனை விஷ்ணு விஷாலே அவரது தயாரிப்பு நிறுவனமான விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் சார்பாக தயாரிக்கிறார். 

இந்த நிலையில் தற்போது அடுத்த படத்திற்கான அறிவிப்பை அறிவித்துள்ளார். கட்டா குஸ்தி பட இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இப்படத்தை விஷ்ணு விஷாலே தயாரிக்கிறார். இது குறித்து பேசிய விஷ்ணு விஷால், “கட்டா குஸ்தி படத்திற்கு நீங்கள் கொடுத்த அன்பு தான் எங்களை மீண்டும் இணைய வைத்துள்ளது. விரைவில் அடுத்தடுத்த அப்டேட் வரும்” என அவரது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.