/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/318_11.jpg)
ஜெயம் ரவி தற்போது ராஜேஷ் இயக்கத்தில் பிரதர், கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் காதலிக்க நேரமில்லை, அறிமுக இயக்குநர் புவனேஷ் அர்ஜூனன் இயக்கத்தில் ஜீனி உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் காதலிக்க நேரமில்லை படம் மொத்த படப்பிடிப்பும் முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. ஜீனி படம் படப்பிடிப்பில் இருக்கிறது. பிரதர் படம் வருகிற திபாவளிக்கு வெளியாகவுள்ளது.
இதனைத் தொடர்ந்து டாடா பட இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கவுள்ளார். இந்தப் படம் ஜெயம் ரவியின் 34வது படமாக உருவாகிறது. ஸ்கிரீன் சீன் மீடியா தயாரிக்கும் இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். . இப்படத்தின் அறிவிப்பு போஸ்டர் சமீபத்தில் வெளியானது. அதில் ஜெயம் ரவி இரண்டு கெட்டப்புகளில் இருந்தார். மேலும் படத்தின் படப்பிடிப்பு டிசம்பரில் தொடங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/317_13.jpg)
இந்த நிலையில் இப்படத்தின் இயக்குநர் மற்றும் வசகர்த்தா ரத்னகுமார் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் இப்படத்தில் கூடுதல் திரைக்கதை ஆசிரியராக பணியாற்றுவதாக கூறப்படுகிறது. மேலும் மாஸ்டர், விக்ரம், லியோ ஆகிய படங்களில் வசனகர்தாவாக பணியாற்றியுள்ளார். இந்தப் படத்தின் கூடுதல் தகவலாக வாழ் மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமான பிரதீப் ஆண்டனி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)