/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/34_61.jpg)
ரஃபீக் இஸ்மாயில் இயக்கத்தில் அனிதா மஹேந்திரன் மற்றும் டிஸ்னி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'ரத்தசாட்சி'. இப்படத்தில் கண்ணா ரவி, இளங்கோ குமரவேல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். எழுத்தாளர் ஜெயமோகனின் கைதிகள் சிறுகதையினை தழுவி இப்படம் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படம் நாளை (09.12.2022) ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதனையொட்டி பத்திரிகையாளர்களைச் சந்தித்தது படக்குழு.
அப்போது நடிகர் கண்ணா ரவி பேசுகையில், "இது எனக்கு மிகவும் உணர்ச்சிகரமான தருணம். இந்தப்படத்தில் மிகவும் சவால் மிகுந்த முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளேன். இயக்குநர் ரஃபீக் இஸ்மாயில் நாவலை திரையில் கொண்டு வந்த விதம் பிரமிப்பானது. இப்படத்தில் எனக்கு ஒத்துழைத்த அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும்இந்நேரத்தில் நன்றி கூறிக்கொள்கிறேன். இப்படம் கண்டிப்பாக உங்கள் அனைவரையும் கவரும்" என்றார்.
இயக்குநர் ரஃபீக் இஸ்மாயில் பேசுகையில், "மணிரத்னம் மற்றும் வெற்றிமாறன் இந்தக் கதையைப் படமாக செய்ய ஆசைப்பட்டார்கள். அவர் பலரைத்தாண்டி ஜெயமோகன் எனக்கு இந்தக் கதையைக் கொடுத்தார். ஒளிப்பதிவாளருடைய பணி இந்தக் கதையை மேம்படுத்தி இருக்கிறது. இசையமைப்பாளர் உடைய பங்கு கதையின் போக்குடன் ஒத்துப் போயுள்ளது. இந்தப் படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்" என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)