Advertisment

புலி முருகன் டீமில் இணையும் ராட்சசன் பட வில்லன்

ratchasan villan movie

மோகன்லால் நடித்த 'புலி முருகன்' படத்தில் வசனம் எழுதிய ஆர்.பி.பாலா 'அகோரி' என்கிற படத்தை எடுத்த கையோடு அடுத்ததாக 'அனுநாகி ' என்ற படத்தை தயாரிக்கவுள்ளார். 'அனுநாகி' தீமைக்கும் நன்மைக்கும் இடையில் நடக்கும் மோதல். இது அறிவியல் சஸ்பென்ஸ் த்ரில்லர் ரகப்படம் என்றாலும் இதில் நட்பு ,காதல், அன்பு, காமெடி, பக்தி, கிராபிக்ஸ், சண்டை காட்சிகள் என அனைவரையும் கவரும் வகையில் படமாக்கவுள்ளனர். ஐஸ்வர்யா ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். படத்தில் மூன்று வில்லன்கள். மைம்கோபி,ரியாஸ்கான், 'காலா' படப்புகழ் ரவிகாலே ஆகியோர் வில்லன்களாக நடிக்கின்றனர். 'ராட்சசன் 'பட வில்லன் சரவணன், 'ராஜா ரங்குஸ்கி' விஜயசத்யா, ஆதவ், 'தொடரி 'ராஜகோபால், ரியமிகா, சம்யுக்தா, ஆங்கிலோ இந்தியன் ரிச்சர்ட் ஆகியோரும் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். ஆர்.பி. பிலிம்ஸ் ஆர்.பி.பாலாவுடன் ராஜ் பிலிம்ஸ் அறந்தை.கே ராஜகோபால் இணைந்து 'அனுநாகி' படத்தை தயாரிக்கின்றனர். படத்தின் கதை, திரைக்கதை, வசனம் ஆர். பி.பாலா எழுத, அறிமுக இயக்குநர் ஜெகதீஷ். டி படத்தை இயக்குகிறார். இப்படத்தின் பூஜை இன்று விமரிசையாக சென்னையில் நடந்தது. விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

Advertisment

ratchasan villan anunaagi
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe