"ராட்சசன் இன்பராஜ் ஆசிரியரை விட இவர்கள் மோசமானவர்கள்" - இயக்குனர் காட்டம்!

gegesghseg

கரோனா தொற்றின் இரண்டாம் அலை இந்தியாவில் மிகத் தீவிரமாகப் பரவிவருகிறது. தமிழகத்திலும் அதிகளவில் கரோனா பாதிப்பு இருந்துவருகிறது. இதனால், முழுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதேவேளையில் கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலம் ஆசிரியர்கள் வகுப்புகள் எடுக்கப்பட்டுவருகின்றன.இந்நிலையில், சென்னை கே.கே நகரில் அமைந்துள்ள பத்மா சேஷாத்திரி பால பவன் தனியார் பள்ளியில் பயிலும் மாணவிகள், தங்களின் ஆன்லைன் வகுப்பில் ஆசிரியர் ராஜகோபாலன் என்பவர் பாலியல் தொந்தரவு கொடுப்பதாகப் புகார்கள் அளித்தனர். இதையடுத்து அவர் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

ஆசிரியரின் இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே விஷ்ணு விஷாலின் ராட்சசன் திரைப்படத்தில், வகுப்பறையிலேயே பள்ளி மாணவிகளிடம் அத்துமீறும் இன்பராஜ் எனும் கதாபாத்திரத்தை ராஜகோபாலன் விவகாரத்தோடு ஒப்பிட்டு பலரும் சமூகவலைத்தளத்தில் பேசிவந்த நிலையில், இது குறித்து ராட்சசன் படத்தின் இயக்குனர் ராம்குமார் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில்... "ராட்சசன் இன்பராஜ் கதாபாத்திரம் சுயமாக உருவாக்கம் செய்யப்படவில்லை. பல உண்மை சம்பவங்களின் அடிப்படையில்தான் உருவாக்கப்பட்டது. அந்த சம்பவங்களின் குற்றவாளிகள் இன்பராஜை விட மோசமானவர்களாக இருந்தார்கள்!" எனப் பதிவிட்டுள்ளார்.

Ramkumar ratchasan villan anunaagi
இதையும் படியுங்கள்
Subscribe