/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/1153.jpg)
இயக்குநர்ராஜமௌலிராம் சரண் மற்றும்ஜூனியர்என்.டி.ஆர். ஆலியாபட்,அஜய்தேவ்கன்ஆகியோரைவைத்துஇயக்கியிருந்த படம் ஆர்.ஆர்.ஆர். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில்வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்லவரவேற்பைபெற்றதோடு,ரூ. 1000 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனையும் படைத்தது.
இந்நிலையில் சிறந்தசவுண்ட்மிக்சிங்பிரிவில்ஆஸ்கர்விருது பெற்றரசூல்பூக்குட்டிஆர்.ஆர்.ஆர் படத்தை கே படம் என்று விமர்சித்துள்ளார். அத்துடன் இப்படத்தில்ஆலியாபட்ஒரு காட்சிப்பொருள்மட்டுமே என்றும் குறிப்பிட்டுள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த ரசிகர்கள்ரசூல்பூக்குட்டியின்கருத்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் சிலர்ஆஸ்கர்விருது பெற்ற ஒருவர்இப்படிபேசலாமா என்றும், உடனே மன்னிப்பு கேட்க வேண்டும்என்றும் கூறி வருகின்றனர்.
கடந்த மே மாதம்ஓடிடியில்வெளியான ஆர்.ஆர்.ஆர்படத்தைபார்த்த வெளிநாட்டினர் ஆர்.ஆர்.ஆர் படத்தை 'கே படம்' என்று விமர்சனம் செய்தனர். அத்தோடு படத்தில்இடம்பெற்றராம்சரண்ஜூனியர்என்.டி.ஆர்ஆகியோருக்குஇடையிலான பாசத்தைஓரின சேர்க்கையோடுஒப்பிட்டுபேசியிருந்தநிலையில் தற்போதுரசூல்பூக்குட்டியும்அதே வார்த்தைபயன்படுத்தியிருப்பது ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
Gay love story ….
— resul pookutty (@resulp) July 3, 2022
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)