கடந்த 2016ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி செம ஹிட்டான படம் கிரிக் பார்டி. இந்த படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான ராஷ்மிகா மந்தானா. கீதா கோவிந்தம் என்னும் தெலுங்கு படத்தில் தன்னுடைய வெகுளியான நடிப்பால பலரின் மனதை கொள்ளை கொண்டார். தற்போது தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகையாக மிகவும் இளம் வயதிலேயே வளர்ந்து நிற்கிறார்.

rashmika

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

தற்போது வெங்கி குடுமுலா இயக்கத்தில் நிதினுடன் ராஷ்மிகா மந்தனா நடித்து வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பு பெற்று வரும் படம் பீஷ்மா. இது விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

இந்த படத்தின் புரொமோஷனின்போது ராஷ்மிகா மந்தானா கொடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டிருந்தார். அது செமையாக வைரலானது. இந்நிலையில் அவருடைய ஒவ்வொரு போஸிற்கும் ஏற்றார்போல வடிவேலு புகைப்படத்தை வைத்து மீம் ஒன்று இணையத்தில் செம வைரலாகி வருகிறது.

அதை ட்விட்டரில் பகிர்ந்து, “என்னால் ஒத்துக்கொள்ள முடியாது. வடிவேலு சோ க்யூட்” என்று பகிர்ந்துள்ளார்.