கிரிக் பார்டி படத்தில் நடித்ததன் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானவர் நடிகை ராஷ்மிகா மந்தானா. இதன்பின் அப்படியே தெலுங்கு திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். விஜய் தேவரகொண்டாவுடன் இவர் நடித்த கீதா கோவிந்தம் படத்தில் இன்னும் அதிகபடியாக பிரபலமடைய தமிழ் சினிமாவில் நடிக்கவும் அவருக்கு வாய்ப்பு வந்துள்ளது.

Advertisment

rashmika

ரெமோ படத்தை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் அடுத்து இரண்டாவதாக நடிகர் கார்த்திக் வைத்து படம் எடுக்கிறார். எஸ்.ஆர் பிரபு தயாரிக்கும் இந்த படத்தின் மூலம் முதன் முதலாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார் ராஷ்மிகா மந்தானா.

Advertisment

இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கப்பட்டுள்ள நிலையில் டைட்டில் இதுவரை அறிவிக்கப்படாமல் இருந்தது. ஆனால், தற்போது இன்ஸ்டாகிராமில் ராஷ்மிகா போட்டுள்ள பதிவில் படத்தின் டைட்டிலை குறிக்கும் விதத்தில் சுல்தான் என்று ஹேஸ்டேகுடன் போட்டிருந்தார். ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படத்தைதான் அவர் பதிவிட்டிருந்தார் என்பதால் பலரும் இது இப்படத்தின் தலைப்பு என்பதை கன்பார்ம் செய்தனர்.

ராஷ்மிகாவின் இந்த செயலால் படக்குழு கோபமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment