பாலிவுட் படத்தில் நடிக்க மறுத்த ராஷ்மிகா மந்தனா!

csfsgsgds

கன்னட சினிமாவில் 'க்ரிக் பார்ட்டி' படம் மூலம் அறிமுகமாகி தற்போது தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா, கார்த்தியுடன் சுல்தான் தமிழ்ப் படத்தில் நடித்தார். தமிழ் சினிமாவில் தற்போதுதான் அறிமுகமாகிறார் என்றாலும் அவருக்கு தமிழ் ரசிகர்கள் ஏராளம். நடிகை ராஷ்மிகா, தற்போது தெலுங்கில் நடிகர் அல்லு அர்ஜூன் ஜோடியாக புஷ்பா படத்திலும், இந்தியில் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா ஜோடியாக மிஷன் மஜ்னு படத்திலும், அமிதாப் பச்சனுடன் ஒரு இந்தி படத்திலும் நடித்து வரும் நிலையில் நடிகை ராஷ்மிகா ‘கிரிக் பார்ட்டி’ படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்க இருப்பதாக சமீபகாலமாக தகவல்கள் பரவி வருகிறது. இந்த நிலையில் ‘கிரிக் பார்ட்டி’ படத்தின் இந்தி ரீமேக்கில் தான் நடிக்கவில்லை என்று நடிகை ரஷ்மிகா மந்தனா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். ரீமேக் படம் என்பதால் அவர் அப்படத்தில் நடிக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

rashmika mandana
இதையும் படியுங்கள்
Subscribe