தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா, தெலுங்கில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக 'புஷ்பா 2' படத்திலும், வெங்கி குடுமுலா இயக்கத்தில் நிதினுக்கு ஜோடியாக ஒரு படத்திலும் நடிக்கிறார். தமிழில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 'ரெயின்போ' படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் தனுஷின் 51வது படத்தில் கதாநாயகியாக கமிட்டாகியுள்ளார்.
தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வரும் ராஷ்மிகா, தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் தொடர்ச்சியாக பட அப்டேட்டுகளை தாண்டி தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் பதிவிட்டு வருகிறார். அந்த அகையில், தற்போது நான் கனவு கண்டது இதுதான் எனக் குறிப்பிட்டு மகிழ்ச்சியுடன் இருக்கும் பதிவை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “சில சமயம் சற்று நிதானித்து யோசிக்க வேண்டும். எப்படி எல்லாம் நடந்தது. எப்போ எல்லாம் நடந்தது. ஏன்நடந்தது. ஆனால் எல்லாமும்நடந்ததற்கு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
நான் எப்போதும் கனவு கண்டதெல்லாம் இதுதான்.நான் அதை உணர்ந்திருக்கவில்லை, என்னவென்று கூட தெரியாத ஒன்றை நோக்கி ஓடிக்கொண்டே இருப்பேன்.ஆனால் சரியான நபர்களுடன் இருப்பது சில நேரங்களில் நீங்கள் நின்று அதை உணர வேண்டும் என்பதை உணர்த்தும். நான் சிறு வயதாக கனவு கண்டது இதுதான்” எனக் குறிப்பிட்டுள்ளார்.