/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/386_1.jpg)
தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கும் 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான 'நானே வருவேன்' படம் வசூல் ரீதியாக வெற்றிபெற்றுள்ளது. இதனிடையே தெலுங்கு மற்றும் தமிழில் உருவாகியுள்ள 'வாத்தி' படம் டிசம்பர் 2ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இதனிடையே தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் ஒரு படம் நடிக்க ஒப்பந்தமானார். இதற்கான அறிவிப்பு கடந்த வருட இறுதியில் வெளியானது. பின்பு எந்த தகவலும் வெளியாகாத நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரி முதல் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக ராஷ்மிகா மந்தனாவிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்த தகவல் உறுதியாகும் பட்சத்தில் தமிழில் விஜய்யை தொடர்ந்து தனுஷுக்கு ஜோடியாகவுள்ளார்.
ராஷ்மிகா மந்தனா, தற்போது விஜய்யுடன் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து அல்லு அர்ஜுனின் புஷ்பா 2-வில் நடிக்கவுள்ளார். தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் நடித்து வரும் ராஷ்மிகா அடுத்ததாக தனுஷுடன் இணையவுள்ளதாக வெளியாகியுள்ள இந்த தகவல் அவரது ரசிகர்களை குஷி படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)